Anbulla Appa cover

Movie: Anbulla Appa (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே… உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே

பெண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே பள்ளியறை வந்தேனே உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே

ஆண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே…

பெண்: உனக்குத்தான் என்று வளர்ந்த ரோஜா உன்னைக் கேட்டா பூத்தது மரங்கள் எல்லாம் கடிதம் போட்டா பறவை வருகிறது

ஆண்: பறவை பறந்து பழக வந்தால் இலைகள் கனியை மூடுது விருந்துக்கழைத்து விலங்கு போட்டால் என்ன அருந்துவது

பெண்: நான் சொல்கிறேன் பகலில் மட்டும் நீ காத்திரு

ஆண்: நான் கேட்கிறேன் பகல்ல இரவு யார் பார்த்தது

பெண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே பள்ளியறை வந்தேனே

ஆண்: உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே…

பெண்: பள்ளியறை வந்து பாடம் படிக்க மனைவிதான் ஒரு மாணவி இருட்டில் படிக்கும் திருட்டு பாடம் எனக்கு தெரியாது

ஆண்: விளக்கு வெளிச்சம் தேவையில்லை விழியின் வெளிச்சம் போதுமே எனக்கு நீயும் உனக்கு நானும் பாடம் ஆவோமே

பெண்: நான் தாங்கினேன் அதற்கு என்னை பாராட்டவா

ஆண்: பாராட்டுவேன் பரிசு தந்து தாலாட்டவா

ஆண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே…

பெண்: உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே

ஆண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே இருவர்: லலலல லாலாலா லலலல லாலாலா லலலல லாலாலா…