Chinna Kuyil Paaduthu cover

Movie: Chinna Kuyil Paaduthu (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய். அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்.

குழு: அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய். அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்.

ஆண்: ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…
குழு: ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…

ஆண்: ஹோய்
குழு: அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய். அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்.

ஆண்: பையனுக்கு புடிச்ச அம்மா தேடி எங்கும் கிடைக்கலே அப்பனுக்கு புடிச்ச பொண்ண பையன் விரும்பவில்லே ஏ ஹேய்

குழு: பையனுக்கு புடிச்ச அம்மா தேடி எங்கும் கிடைக்கலே அப்பனுக்கு புடிச்ச பொண்ண பையன் விரும்பவில்லே

ஆண்: இருவரும் விரும்பி விட்டா ஜாதகம் பொருந்தலே பொருந்திடும் ஜாதகத்த இருவருமே விரும்பலே

குழு: இருவரும் விரும்பி விட்டா ஜாதகம் பொருந்தலே பொருந்திடும் ஜாதகத்த இருவருமே விரும்பலே

ஆண்: வாங்கும் அந்த சம்பளப் பணம்
குழு: புரோக்கருக்குப் போதலே
ஆண்: ஏங்கும் இந்த உள்ளங்களுக்கு
குழு: ஒரு துணை இங்கு இல்லே

ஆண்: அப்பா குடுமி பையன் கையில் மாட்டிக்கிச்சு இந்த இருவரோட குடுமி இனி யாரு கையில் ஹே…

குழு: அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய்… அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்…

ஆண்: ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…
குழு: ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே…

ஆண்: ஹோய் ஆண் மற்றும்
குழு: அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய்… அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய் ஹோய்…