Anthimaalai Neram Song Lyrics

Movie: Monster (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Karthik Netha
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: தா ரா ஆ ஆஅ..ஆஅஹ்… ஹா..ஆஅ..ஆஅ..தா..ர்ராஹ்..
குழு: ……….

ஆண்: அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே என் நிலா வந்ததே…

ஆண்: பேசி பேசி நாளும் காலம் போக்க தோணும் நாவிழுந்து வார்த்தை போர்த்தி கொண்டதே

ஆண்: நதி நீரின் மேலே வெளிச்சங்கள் போலே. விழுந்தாயே விரைந்தேனே உருண்டோடினானே..

ஆண்: அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே என் நிலா வந்ததே…

ஆண்: மொட்டை மாடி மேலே ஒற்றை மழையாகிறேன் ஒட்டடையின் மேலே பட்டாம்பூச்சி பார்க்கிறேன்

ஆண்: உணராத எதுவோ எனை தாலாட்டுதே தினம்தோறும் அதையே மனம்தான் கேட்குதே

ஆண்: சாம்பல் மேலே பூவின் பாதம் கோலம் ஆகிறதே..

ஆண்: அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே என் நிலா வந்ததே…

ஆண்: ஹா..ஆஅ.. தீரா..நனனா…

ஆண்: யாரின் மழை மீது யாரின் மழை சேர்ந்ததோ யாரின் குடை வாங்கி யாரின் மனம் போகுதோ

ஆண்: திறக்காத கதவாய் பல நாள் போனதே கதவில்லா வெளியாய் புது நாள் சேருதே

ஆண்: வட்டம் போலே வாழ்ந்தேன் காதல் வாசல் வைக்கிறதே.ஏ..

ஆண்: அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே என் நிலா வந்ததே…

ஆண்: பேசி பேசி நாளும்
குழு: பேசி பேசி நாளும்
ஆண்: காலம் போக்க தோணும்
குழு: காலம் போக்க தோணும்
ஆண்: நாவிழுந்து வார்த்தை போர்த்தி கொண்டதே

ஆண்: நதி நீரின் மேலே வெளிச்சங்கள் போலே. விழுந்தாயே விரைந்தேனே உருண்டோடினானே..

ஆண்: அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே என் நிலா வந்ததே…