Lyricist Viveka

அண்ணாத்த அண்ணாத்த பாடல் வரிகள்

காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு

ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க
ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க

வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா

அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் நடையில
உடையில கொல கொல மாஸு ஹேய் ஹேய்

கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு

உறுதியுடன் மோது மோது உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது வானையும் வளைக்கலாம்…

அண்ணாத்த பேசுனா ஸ்டைலு அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…

அண்ணாத்த பேசுனா ஸ்டைலு அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…

அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா

கீழடிக்கு பக்கத்தூரு வாரித்தரும் வைகையாறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ஹேய்
தாளடிக்கும் களத்துல தப்பிப்போன நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு ஹேய்

வேரில் வீரம் தாங்கி ஓங்கி வாழும் அதிசய நிலமடா ஹேய்
மாரில் ஈட்டி வாங்கி போரில் மோதும் மறத்தமிழ் இனமடா ஹேய்

பாசக்காரா நேசக்காரா வேலைக்காரா மூளைக்காரா
மாயக்கார மச்சக்காரா காவக்கார வாயா

காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு

உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுய தவறுணரும் செயலல்லவா

நெற்றியில வேர்வை வேணும் நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல தானா வந்து சேரும்

விறல் பத்து இருக்குது விடியில எழுப்பிடு எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
கனவுகள் நடந்திடும் அதுவரை வாழ்க்கையில்
நொடியும் நீ துஞ்சக்கூடாதே

அண்ணாத்த பேசுனா ஸ்டைலு அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…

அண்ணாத்த பேசுனா ஸ்டைலு அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்

போடு… அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு

ஹேய்…அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில கொல கொல மாஸு

ஹேய் தலைவா ஹேய் தலைவா அண்ணாத்த மாஸுக்கே மாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசுதான்

அண்ணாத்த மாஸுக்கே மாஸு அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசுதான்…

Movie: Annaatthe
Lyrics: Viveka
Music: D. Imman