Athisaya Penn cover

Movie: Athisaya Penn (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: V. Seetharaman
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய் அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய்

ஆண்: அந்தோ உனது உலகில் நடக்கும் அலங்கோலம் தன்னைப் பாராய் அலங்கோலம் தன்னைப் பாராய்

ஆண்: அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய்

ஆண்: வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டும் நெஞ்சம் பதறவும் இல்லையோ..ஓ.. நெஞ்சம் பதறவும் இல்லையோ..ஓ..

ஆண்: அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர் துடைத்திட மனம் வரவில்லையோ..ஓ. சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு கொஞ்சமும் நாணமே இல்லையோ… கொஞ்சமும் நாணமே இல்லையோ…

ஆண்: அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த ஆண்டவனே நீ வாராய் ஆண்டவனே நீ வாராய்

ஆண்: உண்மைக்கே திரை போடுது உலகம் பொய்யே வெளியில் உலாவுது உண்மைக்கே திரை போடுது உலகம் பொய்யே வெளியில் உலாவுது

ஆண்: நன்மை அழிய தீமை வளர சுயநலமே பூமியை ஆளுது கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க கோபமும் வரவே இல்லையோ… கோபமும் வரவே இல்லையோ… கோபமும் வரவே இல்லையோ… கோபமும் வரவே இல்லையோ…ஓ…