Movie: Anbulla Appa (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Added Date: Feb 11, 2022
பெண்: அன்புள்ள அப்பா
ஆண்: என்னப்பா
பெண்: உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா
ஆண்: அப்பபப்ப்பா பொல்லாத பெண்ணப்பா
பெண்: அன்புள்ள அப்பா
ஆண்: என்னப்பா
பெண்: உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா
ஆண்: அஹாஹஹா பொல்லாத பெண்ணப்பா
பெண்: ம்..உங்களோடது காதல் கல்யாணந்தானே
பெண்: அப்கோர்ஸ் இட் வாஸ் எ லவ் மேரேஜ்
பெண்: நீங்க அம்மாவ பார்த்தது எப்போது ஞாபகம் உண்டா இப்போது
ஆண்: ம்ம்ம்ம்…ஹஹஹா முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே அவளை நான் பார்த்தது மலர்கள் வண்டுகளுக்கு பேட்டிக் கொடுக்கும் ஊட்டியில் ஒரு மலர் காட்சியில்தான் அந்த நந்தவனத்தை சந்தித்தேன்
பெண்: அம்மா எப்படி அழகா இருந்தாங்களா
ஆண்: அந்த மலர்க்காட்சியில் அழகான பூவே அவள் மட்டும்தானே பூக்கள் எல்லாம் அவள் கனிந்த முகம் காண நாணிக் கோணி குனிந்துக் கொண்டன
பெண்: உங்கள் மண வாழ்க்கையில் மலரும் நினைவுகள் உண்டா
ஆண்: நான் தாயிடம் கூடப் பார்த்ததில்லை அந்தப் பாசம் அவள் நினைவுகளே என் சுவாசம்
பெண்: அன்புள்ள அப்பா
ஆண்: என்னப்பா
பெண்: உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா
ஆண்: அப்ப்பப்பா நாட்டி கேர்ள்ளப்பா
பெண்: அப்பா அம்மா உங்களை நல்லா கவனிச்சிக்கிட்டாங்களா
ஆண்: சேலையில் எனது முகம் துடைப்பாள் நான் சிணுங்கினால் செல்ல அடிக் கொடுப்பாள் விரல்களுக்கெல்லாம் சுளுக்கெடுப்பாள் என் நகக்கண்ணில் கூட அழுக்கெடுப்பாள்
ஆண்: தாயாய் அவளைப் பார்த்ததுண்டு என் தாதியாய் அவளைப் பார்த்ததுண்டு.. பட்…அவள் உறங்கி மட்டும் நான் பார்த்ததில்லை
பெண்: இஸ் ட்… அம்மா உறங்கி நீங்க பார்த்ததே இல்லையா
ஆண்: பார்த்தேன் மகளே பார்த்தேன் பார்த்தேன் மகளே பார்த்தேன் எப்போது அவள் கடைசி உறக்கம் கொள்ளக் கண் மூடினாளோ அப்போதுதான் அவள் உறங்கி நான் பார்த்தேன்
பெண்: அப்பா…
ஆண்: ஆம் மகளே.. நீ கண் திறந்தாய்.. அவள் கண் மறைந்தாள்.. என் வானத்தில்… விடி வெள்ளி எழுந்தது… வெண்ணிலவு… மறைந்தது…