Lyricist Palani Bharathi

ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடல் வரிகள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும்
ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்க்கம் ஆகுமே
ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

இன்னும் நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்

தென் பொதிகை சந்தனக் காற்று உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும்…

Movie: Poove Unakkaga
Lyrics: Palani Bharathi
Music: S. A. Rajkumar