அம்மா அம்மா பாடல் வரிகள்
அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன கண்ணாமூச்சி வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்குன் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே..
ஓ… அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை
அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே கண்ணே நீயும் என் உயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்…