Aandavan Kattalai  cover

Movie: Aandavan Kattalai (1964)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: தென்னம் இளங்கீற்றினிலே…ஏ…ஏ..ஏ.. {தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது} (2)

ஆண்: {தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது}(2)

ஆண்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஆண்: காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்

ஆண்: காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்

ஆண்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பெண்: ஓஒ…ஓஓ..ஓஒ.. ஓஒ…ஓஒ…ஓஒ…

பெண்: அமைதியான நதியினிலே நதியினிலே நதியினிலே ஓடும்

பெண்: நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது

பெண்: நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது

பெண்: அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்

பெண்: அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்

பெண்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பெண்: காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்

பெண்: அமைதியான நதியினிலே ஓடும்