Movie: Anjaneya (2003)
Music: Mani Sharma
Lyricists: Vairamuthu
Singers: Unnikrishnan and Sujatha
Added Date: Feb 11, 2022
குழு: …….
ஆண்: அகப்பொருளா நீ அகப்பொருளா என உரைத்திடடி என் உயிரே புறப்பொருளா நீ புறப்பொருளா என உரைத்திடடி என் உயிரே
பெண்: அருகினிலே நீ இருந்துவிட்டால் உன் அகப்பொருளாய் நான் இருப்பேன் புறப்பட்டுதான் நீ போன பின்னே உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்
ஆண்: பூச்செடி நீயானால் உன் வேர் என நான் இருப்பேன்
பெண்: சூரியன் நீயானால் உன் காய்ச்சலில் நான் இருப்பேன்
ஆண்: அதிகாலை வெண்ணிலா சிரிக்கிறதே எனை ஆயுள் கைதியாய் அழைக்கிறதே
பெண்: பசி தூக்கம் யாவுமே மறக்கிறதே ஒரு காதல் பைத்தியம் பிடிக்கிறதே
ஆண்: அகப்பொருளா நீ அகப்பொருளா என உரைத்திடடி என் உயிரே புறப்பொருளா நீ புறப்பொருளா என உரைத்திடடி என் உயிரே
பெண்: அருகினிலே நீ இருந்துவிட்டால் உன் அகப்பொருளாய் நான் இருப்பேன் புறப்பட்டுதான் நீ போன பின்னே உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்
பெண்: ஆகாயம் ஒரு வீடு அந்த நிலவு நமது கூடு
ஆண்: பூவான உன் தேகம் அதை பூட்டி வைத்தால் பாவம் இவள் வாசனை கண்டு உன் வயத்தை கிண்டும் வண்டு
பெண்: நீ நானென என மாறினால் இனி ரெண்டு வாழ்க்கை ஏதேது
ஆண்: தாமரை இலை மீதிலே மனம் தண்ணீர் போல தூங்காது
பெண்: வாழ்கிற நாளிலே சொர்க்கம் கண்டேனே இன்று
ஆண்: பூஜையில் பூஜையில் பூவை தின்று எனை மென்று
பெண்: அருகினிலே நீ இருந்துவிட்டால் உன் அகப்பொருளாய் நான் இருப்பேன் புறப்பட்டுதான் நீ போன பின்னே உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்
ஆண்: அகப்பொருளா நீ அகப்பொருளா என உரைத்திடடி என் உயிரே புறப்பொருளா நீ புறப்பொருளா என உரைத்திடடி என் உயிரே
ஆண்: கம்பன் வீட்டினில் உள்ள ஒரு கவிதை ஓலை நீதான்
பெண்: உன் தோளில் தினம் தூங்கும் ஒரு குழந்தை போல ஆனேன் என்னை நீ கிள்ளும் போது நான் உன் பேர் சொல்லி அழுவேன்
ஆண்: உன் கண்களில் இமை யாவுமே என் கண்ணை வந்து கொத்தாதோ
பெண்: கண்களில் உள்ள பார்ப்பதா அது காதல் என்று கத்தாதோ
ஆண்: உன்னை நான் உன்னை நான் ஊட்டி விடவேண்டும் என்பேன்
பெண்: உன்னை நான் உன்னை நான் வாயை வாயாலே தின்பேன்
ஆண்: அகப்பொருளா நீ அகப்பொருளா என உரைத்திடடி என் உயிரே புறப்பொருளா நீ புறப்பொருளா என உரைத்திடடி என் உயிரே
பெண்: அருகினிலே நீ இருந்துவிட்டால் உன் அகப்பொருளாய் நான் இருப்பேன் புறப்பட்டுதான் நீ போன பின்னே உன் புறப்பொருளாய் நான் தவிப்பேன்
ஆண்: பூச்செடி நீயானால் உன் வேர் என நான் இருப்பேன்
பெண்: சூரியன் நீயானால் உன் காய்ச்சலில் நான் இருப்பேன்
ஆண்: அதிகாலை வெண்ணிலா சிரிக்கிறதே எனை ஆயுள் கைதியாய் அழைக்கிறதே
பெண்: பசி தூக்கம் யாவையும் மறக்கிறதே ஒரு காதல் பைத்தியம் பிடிக்கிறதே