Lyricist Vaali

அடி ராக்குமுத்து ராக்கு பாடல் வரிகள்

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு

அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா

கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

வான்சுமந்த வான்சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே
மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும்
பூர்வஜென்மம் சேர்த்து வச்ச சொத்துவரும் சொத்துவரும்

வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும்

அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

ஏழு சட்டி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்

வாரிசு ஒண்ணு தந்தற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்

அம்மன் அருள் இல்லையின்னா
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லையென்ற பேச்சுக்கள்
பொய்யாய் போனதிங்கே

ஊரில் எல்லாரும் ஒண்ணு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா

கிளி மூக்கு முத்தம்மா அவர் வாக்கு சுத்தம்மா
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
அடி ராக்குமுத்து ராக்கு ராக்குடியை சூட்டு
காப்பு தங்க காப்பு கை பிடிச்சு பூட்டு…

Movie: Ejamaan
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja