actress savitri images

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு

Name Savitri
Born Name Nissankara Savitri
Born Dec 6, 1936
Died Dec 26, 1981
Occupation Actress ,Singer, Director, Producer
Parents Name Nissankara Guruvaiya (Father)

Nissankara Subhadramma (Mother)

Spouse Gemini Ganesan
Children Vijaya Chamundeswari (Daughter)

Sathish Kumaar Ganesan (Son)

நடிகையர் திலகம் என சினிமா ஆர்வலர்களால் அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்கள் ஒரு  புகழ் பெற்ற தென்னிந்தியத் நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.

actress savitri images

தமிழ்த்திரையுலகில் 1950 மற்றும் 1960களில் தன் அழகாலும் தன் நடிப்பினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சாவித்திரி. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா  மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றார். அவரது இறுதிக்காலம் மிகவும் மோசமானதாகவே அமைந்தது. வெற்றிகரமான மாபெரும் நடிகையாக உலாவந்த சாவித்ரி தான் சம்பாதித்தித்த அனைத்தையும் இழந்து தெருவுக்கு வந்தார்.

Actress Savitri Childhood Days in Tamil

சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். சாவித்திாியின் இயற்பெயர் சரசவாணிதேவி என்பதே ஆகும். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்.

actress savitri images

Actress Savtri Early Life in Tamil

தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும் நடிகை சாவித்திரி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் சிறுசிறுவேடங்கலே.

actress savitri images

பிரபல ஜெமினி நிறுவனம் தங்களின் அடுத்த படத்திற்கு கலைஞர்கள் தேர்வு நடத்துவதாக கேள்விப்பட்டு சென்றவருக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. சாவித்ரியின் பேச்சும் நடிப்பும் அங்கிருந்த நிர்வாகிக்கு திருப்தியை தராததால், ‘ஏன்மா நீயெல்லாம் நடிக்க வந்த’ என நக்கலாக கேட்டனர்.

Actress Savitri Entry in Cini Field in Tamil

எல்.வி பிரசாத் இயக்கிய ஒரு படத்திற்கு இரண்டாம் கதாநாயகி வேடம் தரப்பட, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட சாவித்திரிக்கு படத்தின் முக்கிய நடிகையால் அதிர்ஷ்டம் அடித்தது. முதல் இருநாட்கள் படப்பிடிப்பிலேயே இயக்குநருக்கும் முக்கிய கதாநாயகிக்கும் இருந்த கருத்து  வேறுபாட்டால் படம் பாதியில் நின்றது. இயக்குநர் ஒரே முடிவாக இரண்டாவது கதாநாயகியை முதல்நாயகி ஆக்கினார். இதன் காரணமாக பல விமர்சனங்கள் எழுந்தன, அதையெல்லாம் இயக்குநர் எல் .வி பிரசாத் பொருட்படுத்தாமல் சாவித்திரிதான் தன் படத்தின் நாயகி என்பதில் உறுதியாக இருந்தார்.

actress savitri images

படம் வெளியானபோது படத்திலிருந்து கழன்றுகொண்ட முதல் நடிகைக்கு மனதளவில் நன்றி சொன்னார் இயக்குநர். அத்தனை அற்புதமாக காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை பக்கங்களிலும் அசத்தியிருந்தார் சாவித்திரி. எல்.வி பிரசாத் முதல் நடிகையிடமிருந்து எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பான நடிப்பை திரையில் தெறிக்கவிட்டிருந்தார் சாவித்திரி.

அதன் பிறகு மிஸ்ஸியம்மா என்ற அத்திரைப்படம் திரையிட்ட இடங்களில் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி.  அடுத்த 20 வருடங்கள் அவரது கார் போர்டிகோ, தயாரிப்பாளர்களால் நிறைந்தே இருந்தது. அந்த உச்சத்தை அவர் தக்கவைத்துக்கொண்டாரா என்பதில்தான் விதியின் விபரீதமான விளையாட்டு இருந்தது.

actress savitri images

திரையுலகை ஆட்டிப்படைத்த பிரபல கதாநாயகர்களே, ‘இணையாக நடிக்க சாவித்திரியை ஒப்பந்தம் செய்யுங்கள்’ என  வெட்கத்தை விட்டுத் தயாரிப்பாளரிடம் கேட்கும் அளவு சாவித்திரியின் புகழ் கொடி பறந்துகொண்டிருந்தது.

Actress Savitri Marriage Life in Tamil

மிஸ்ஸியம்மா திரைப்படம் சாவித்திரியின் திரையுல வாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆம்.. படம் முடியும் தருவாயில் சாவித்திரி படத்தின் கதாநாயகன் ஜெமினி கணேசன் மீது உண்மையிலேயே காதல் வயப்பட்டிருந்தார். இத்தனைக்கும் ஜெமினி ஏற்கனவே மணமானவர். காதலுக்குதான் கண் இல்லையே!

actress savitri images

படம் வெளியாகி சில மாதங்களில் தம்பதிகளாகினர். மிஸ்ஸியம்மா தந்த புகழால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாவித்திரி. தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆந்திராவில் என்.டி. ஆர் நாகேஷ்வரராவ் என ஜோடி சேர்ந்த சாவித்திரியின் புகழ் அடுத்த இருபது வருடங்களில் கொடிகட்டிப் பறந்தது திரையுலகில்.

‘நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தே’ என முன்னொரு காலத்தில் அவமானப்படுத்திய ஜெமினியுடன் திருமணமாகி, அவருக்கு 2 குழந்தைகளும் பிறந்திருந்தன. பணம், புகழ், பிரபல்யம் என நன்றாகச் சென்றுகொண்டிருந்த சாவித்திரியின் வாழ்வில் விதி மதுவின் வடிவில் வந்தது.

 Actress Savitri Falling Down in Tamil

புகழின் வெளிச்சத்தில் இருந்தபோது ஒருநாள் அவரின் நெருங்கிய தோழிகள் சிலர், ‘உனக்கு இருக்கும் திறமைக்கு ஏன் நீயே படத்தை தயாரித்து, இயக்கக் கூடாது’ என துாபம் போட்டனர். சாவித்திரி அதற்கு உடன்பட்டால் அவர்களுக்கு அதில் வருமானம் என்பதுதான் இதன் பின்னணி. எறும்பு ஊற கல்லும்தேயும் என்பார்களே…ஒருநாள் அந்த முடிவுக்கு உடன்பட்டார் சாவித்திரி.

முதல் இரு படங்கள் வெற்றி. அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பில் சிக்கல் வர தானே படங்களை தயாரிக்கும் முடிவுக்கும் வந்தார். அதுவரை எப்போதோ எட்டிப்பார்த்து விட்டுச் சென்றுகொண்டிருந்த விதி, சாவித்திரியின் வாழ்வில் சம்மணம் போட்டு அமர்ந்தது. தயாரித்த படங்கள் நஷ்டம், படு நஷ்டம் என தயாரிப்பு நிர்வாகிகளிடமிருந்து தகவல் வந்தது.

actress savitri images

தியேட்டரில் கூட்டம் அலைமோதினாலும் சாவித்திரியின் நம்பிக்கை உகந்த நபர்கள் அதை மறைத்து நஷ்டக்கணக்கை காட்டி சாவித்திரியை நிம்மதி இழக்கச்செய்தனர். இதனிடையே படம் தயாரிப்பது நமக்கு வேண்டாத வேலை என்று அறிவுரை சொல்லியதால் சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்குமான உறவில் பிணக்கு உருவாகியிருந்தது.

நம்பிய உறவுகளும் சந்தர்ப்பம் பார்த்து ஒதுங்கிவிட காலில் தங்க மெட்டி அணிந்த ஒரே நடிகை என சிலாகிக்கப்பட்ட சாவித்திரி நடுத்தர குடும்பத்தினர் கூட வாழத் தயங்குகிற ஒரு வீட்டிற்கு இடம் மாறும் அவலம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் அவர் கண்முன் நிற்க ஒரு கட்டத்தில் சுதாரித்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையே தன் உறவுக்கார பையனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துவைத்து கொஞ்சம் நிம்மதியடைந்தார்.

Actress Savitri Important Film List in Tamil

வருடம்

படம்

(1952) கல்யாணம் பண்ணிப்பார்
(1953) தேவதாஸ்
(1953) வஞ்சம்
(1953) பரோபகாரம்
(1953) மனம்போல் மாங்கல்யம்
(1954) சுகம் எங்கே
(1955) செல்லப்பிள்ளை
(1955) குணசுந்தரி
(1955) மாமன் மகள்
(1955) மகேஸ்வரி
(1955) மிஸ்ஸியம்மா
(1956) மாதர் குல மாணிக்கம்
(1956) அமரதீபம்
(1956) பெண்ணின் பெருமை
(1957) யார் பையன்
(1957) மாயா பஜார்
(1957) மகாதேவி
(1957) இரு சகோதரிகள்
(1957) எங்கள் வீட்டு மகாலட்சுமி
(1957) கற்புக்கரசி
(1957) சௌபாக்கியவதி
(1957) வணங்காமுடி
(1958) காத்தவராயன்
(1958) கடன் வாங்கி கல்யாணம்
(1958) அன்னையின் ஆணை
(1958) திருமணம்
(1958) பதி பக்தி
(1958) பானை பிடித்தவள் பாக்கியசாலி
(1960) களத்தூர் கண்ணம்மா
(1960) குறவஞ்சி
(1960) பாட்டாளியின் வெற்றி
(1960) புதிய பாதை
(1961) எல்லாம் உனக்காக
(1961) பாசமலர்
(1961) பாவ மன்னிப்பு
(1962) பாத காணிக்கை
(1962) பார்த்தால் பசி தீரும்
(1962) காத்திருந்த கண்கள்
(1962) கொஞ்சும் சலங்கை
(1962) படித்தால் மட்டும் போதுமா
(1962) பந்த பாசம்
(1962) வடிவுக்கு வளைகாப்பு
(1963) பரிசு
(1963) கற்பகம்
(1963) இரத்தத் திலகம்
(1964) நவராத்திரி
(1964) ஆயிரம் ரூபாய்
(1964) கை கொடுத்த தெய்வம்
(1964) கர்ணன்
(1964) வேட்டைக்காரன்
(1965) திருவிளையாடல்
(1965) ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
(1966) அண்ணாவின் ஆசை
(1966) தட்டுங்கள் திறக்கப்படும்
(1967) கந்தன் கருணை
(1970) திருடாத திருடன்
(1971) பிராப்தம்
(1972) ஜக்கம்மா

Actress Savitri Death

1980 களில் ஒருநாள் படப்பிடிப்பிற்காக மகனுடன் மைசூர் சென்ற சாவித்திரி சர்க்கரை நோய் பாதிப்புக்கு மத்தியிலும் கொஞ்சம் ‘நிம்மதி’ தேட அதுவே எமனாகிப்போனது. மயக்கமாகி கோமாவுக்கு போன சாவித்திரி அதிலிருந்து மீளாமலேயே உயிரைவிட்டார். சாவித்திரி என்ற கலைமேதை தன் பயணத்தை முடித்துக்கொண்டார்.

actress savitri images

19 மாதங்கள் கோமா என்னும் ஆழ்மயக்க நிலையில் இருந்த சாவித்திரி 1981 டிசம்பர் 26-ஆம் நாள் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45. அப்போது அவருக்கு நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமும் இருந்தன. இந்திய அரசு அவரது நினைவாக 2011-ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு பிரமிப்பாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது, அவரது வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ மற்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிக்கண்டது.

Actress Savitri Awards and Recognition in Tamil

  • கலைமாமணி விருது

Actress Savitri Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia