நடிகர் விஜயின் வாழ்க்கை வரலாறு

Name

Vijay

Born Name Joseph Vijay Chandrasekhar
Age 47 – (22 June, 1974)
Occupation Actor, Dancer, Playback Singer
Parents Name S. A. Chandrasekhar (Father)
Shoba (Mother)
Spouse Name Sangeeta Sornalingam
Children Jason Sanjay (Son)
Divya Shasha (Daughter)

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, சப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.

actor vijay images

Actor Vijay Childhood Days in Tamil

விஜய் 1974-ஆம் ஆண்டு சூன் 22 அன்று மதராசில் (தற்போது சென்னை) பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கருநாடகப் பாடகி ஆவார். விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். அவர் இரண்டாவது அகவையில் இறந்து விட்டார். வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனத்துடனும் இருந்தார். வித்யாவின் இழப்பிற்குப் பிறகு அமைதியாகி விட்டார். இவரது தங்கை வித்யாவின் கதை 2005ம் ஆண்டுப் படமான சுக்ரனில் சொல்லப்பட்டிருக்கும். அப்படத்தில் விஜய் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

actor vijay images

விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் இணைந்தார்.

Actor Vijay Early Life in Tamil

லயோலா கல்லூரியில், காட்சித் தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்சில்) பட்டம் பெறச் சேர்ந்தார். இறுதியில் நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறினார்.

actor vijay images

Actor Vijay Marriage Life in Tamil

விஜய் பிரிட்டனில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 25 ஆகத்து, 1999 அன்று மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000-ல் லண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005-ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள். ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் (2009) படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது தந்தையின் இளமை காலத்திற்கு முந்தைய அகவையுடைய மகளாக தெறி (2016) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Actor Vijay Entry in Cini Field in Tamil

விஜய் குழந்தைக் காலத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

actor vijay images

Actor Vijay Child Artist Movies in Tamil

நடிகர் விஜய் பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Actor Vijay Main Role movies in Tamil

இவரது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய பிறகு, விஜய் தன் பதினெட்டாம் வயதில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி (1993) படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் நல்ல வசூல் செய்தது. 1994 இல், இவர் ரசிகன் படத்தில் தோன்றினார், இதுவும் நல்ல வசூல் செய்தது. இளைய தளபதி என்ற அடைமொழி விஜய்க்கு வழங்கப்பட்ட முதல் படம் இதுதான். இந்த அடைமொழி பிற்காலத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியது. இவர் தேவா மற்றும் ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்தார்.

actor vijay images

மேற்குறிப்பிட்ட இரண்டாவது படத்தில் இவர் அஜித் குமாருடன் இணைந்து நடித்தார். பின்னர் விஷ்ணு மற்றும் சந்திரலேகா ஆகிய படங்களில் நடித்தார். 1995 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.

இப்படங்கள் அனைத்தும் விஜய்க்கு வெற்றியை கொடுத்தாலும் திருப்புமுனையாக அமைந்த படம் தான் 1996 இல், விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாகவும் ஆக்கியது. விஜயின் பத்தாவது படம் வசந்த வாசல் ஆகும். அதன்பின் இவர் மாண்புமிகு மாணவன் மற்றும் செல்வா ஆகிய சண்டைப் படங்களிலும், காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்திலும் நடித்தார்.

actor vijay images

1997 இல், லவ் டுடே மற்றும் ஒன்ஸ் மோர் ஆகிய படங்களில் விஜய் நடித்தார். இதில் ஒன்ஸ் மோர் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சிம்ரனுடன் விஜய் இணைந்து நடித்தார். பின்னர் மணிரத்னம் தயாரிக்க வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் நடித்தார். பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. 1998 இல் விஜய் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன் மற்றும் நிலாவே வா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 1999 ஆம் ஆண்டில் விஜய், சிம்ரனுடன் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடித்தார். இப்படதிற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. இதன்பின் விஜய் என்றென்றும் காதல், நெஞ்சினிலே மற்றும் கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார்.

2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விஜய் திருமலை என்ற படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இப்படம் கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனர் ரமணாவால் இயக்கப்பட்டது. இப்படம் இவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. விஜயின் வாழ்க்கையில் திருமலை ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

actor vijay images

அதன் பிறகு விஜயின் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியை குவித்தாலும் மாபெரும் வெற்றியாக இயக்குனர் ஷங்கர் இயக்கியக நண்பன் படம் பார்க்கப்பட்டது. இது 3 இடியட்ஸ் என்ற இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். அமீர்கான் இந்தியில் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடித்தார். இது 2012 பொங்கல் வார இறுதியில் வெளியிடப்பட்டது. வசூலில் பெரிய வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் நண்பன் திரையிடப்பட்டது. படத்தில் விஜயின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. முன்னணி இந்திய நடிகர் கமல்ஹாசன் உட்பட பலரும் பாராட்டினர். நண்பன் 100 நாட்கள் ஓடியது.

actor vijay images

அதன் பிறகு விஜயின் நடிப்பில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட படங்கள் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படமாக ஆனது. மற்ற படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

Actor Vijay Film List in Tamil

ஆண்டு படம் இயக்குநர்
2022 பீஸ்ட் நெல்சன்
2021 மாஸ்டர் லோகேஷ் கனகராஜ்
2019 பிகில் அட்லீ
2018 சர்கார் ஏ. ஆர். முருகதாஸ்
2017 மெர்சல் அட்லீ
2017 பைரவா பரதன்
2016 தெறி அட்லீ
2015 புலி சிம்புதேவன்
2014 கத்தி ஏ. ஆர். முருகதாஸ்
2014 ஜில்லா ஆர். டி. நேசன்
2013 தலைவா விஜய் (இயக்குனர்)
2012 ரவுடி ரதோர் பிரபு தேவா
2012 துப்பாக்கி ஏ. ஆர். முருகதாஸ்
2012 நண்பன் ஷங்கர்
2011 வேலாயுதம் மோ. ராஜா
2011 காவலன் சித்திக்
2010 சுறா எஸ்.பி. ராஜ்குமார்
2009 வேட்டைக்காரன் பாபு சிவன்
2009 வில்லு பிரபு தேவா
2008 பந்தயம் எஸ். ஏ. சந்திரசேகர்
2008 குருவி தரணி
2007 அழகிய தமிழ் மகன் பரதன்
2007 போக்கிரி பிரபு தேவா
2006 ஆதி ரமணா
2005 சிவகாசி பேரரசு
2005 சுக்ரன் எஸ். ஏ. சந்திரசேகர்
2005 சச்சின் ஜான் மகேந்திரன்
2005 திருப்பாச்சி பேரரசு
2004 மதுர ஆர். மாதேஷ்
2004 கில்லி தரணி
2004 உதயா அழகம் பெருமாள்
2003 திருமலை ரமணா
2003 புதிய கீதை கே. பி. ஜெகன்
2003 வசீகரா கே. செல்வபாரதி
2002 பகவதி ஏ. வெங்கடேஷ்
2002 யூத் வின்சென்ட் செல்வா
2002 தமிழன் ஏ. மஜீத்
2001 ஷாஜகான் ரவி
2001 பத்ரி அருண் பிரசாத்
2001 பிரெண்ட்ஸ் சித்திக்
2000 பிரியமானவளே கே. செல்வபாரதி
2000 குஷி எஸ். ஜே. சூர்யா
2000 கண்ணுக்குள் நிலவு ஃபாசில்
1999 மின்சாரக் கண்ணா கே. எஸ். ரவிக்குமார்
1999 நெஞ்சினிலே எஸ். ஏ. சந்திரசேகர்
1999 என்றென்றும் காதல் மனோஜ் பட்னாகர்
1999 துள்ளாத மனமும் துள்ளும் எஸ். எழில்
1998 நிலாவே வா ஏ. வெங்கடேசன்
1998 பிரியமுடன் வின்சென்ட் செல்வா
1998 நினைத்தேன் வந்தாய் கே. செல்வபாரதி
1997 காதலுக்கு மரியாதை ஃபாசில்
1997 நேருக்கு நேர் வசந்த்
1997 ஒன்ஸ்மோர் எஸ். ஏ. சந்திரசேகர்
1997 லவ் டுடே பாலசேகரன்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன் ஆர். சுந்தர்ராஜன்
1996 செல்வா ஏ. வெங்கடேசன்
1996 மாண்புமிகு மாணவன் எஸ். ஏ. சந்திரசேகர்
1996 வசந்த வாசல் எம். ஆர். சச்சுதேவன்
1996 பூவே உனக்காக விக்ரமன்
1996 கோயம்புத்தூர் மாப்ளே சி. ரெங்கநாதன்
1995 சந்திரலேகா நம்பிராஜன்
1995 விஷ்ணு எஸ். ஏ. சந்திரசேகர்
1995 ராஜாவின் பார்வையிலே ஜானகி சௌந்தர்
1994 தேவா எஸ். ஏ. சந்திரசேகர்
1994 ரசிகன் எஸ். ஏ. சந்திரசேகர்
1993 செந்தூரப் பாண்டி’ எஸ். ஏ. சந்திரசேகர்
1992 நாளைய தீர்ப்பு எஸ். ஏ. சந்திரசேகர்
1987 சட்டம் ஒரு விளையாட்டு எஸ். ஏ. சந்திரசேகர்
1985 நான் சிவப்பு மனிதன் எஸ். ஏ. சந்திரசேகர்
1984 வெற்றி எஸ். ஏ. சந்திரசேகர்

Actor Vijay Social Activities & Political Interest in Tamil

விஜய் ஒரு சமூக நல அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். இது ஜூலை 26, 2009 அன்று புதுக்கோட்டையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இவரது பெரும்பான்மையான அறப்பணிகளுக்கு இவ்வியக்கம்தான் பொறுப்பாக உள்ளது.

தானே புயலுக்குப் பிறகு, கடலூரில் உள்ள கம்மியம்பேட்டையில் ஒரு நிவாரண முகாமுக்கு இவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் அரிசி வழங்கினார். அந்நேரத்தில் கடலூர் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. சில உதவிகளை வழங்கியதன் மூலம் மக்களுக்கு விஜய் உதவினார். முகாம் அமைக்கப்பட்ட பகுதி, தங்களது விருப்பத்திற்குரிய நட்சத்திரத்தை ஒரு தடவை பார்ப்பதற்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் காரணமாக சீக்கிரமே ஒரு பண்டிகை தோற்றத்திற்கு மாறியது.

actor vijay images

மே 2008ல், பள்ளியிலிருந்து படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறும் குழந்தைகளை தடுக்கும் முயற்சியில் விஜய் ஹீரோவா? ஜீரோவா? என்ற ஒரு சிறிய பொது சேவை வீடியோவில் தோன்றினார். 2012ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்காக விஜய் கல்வி விருதுகள் 2012 ஆனது ஜூலை 8 ஆம் தேதி, 2012 அன்று விஜய் மக்கள் இயக்கத்தால் சென்னை ஜே. எஸ். கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட்டது. விருதுகளை விஜயே நேரில் வழங்கினார். தன் பிறந்த நாளில், 22 சூன் 2007ல் விஜய் எழும்பூர் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

சமூக நல நடவடிக்கைகள் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்தது மற்றும் திரைத்துறையில் தான் செய்த சாதனைகள் ஆகியவற்றின் காரணமாக 2007ல் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) இருந்து விஜய் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. 2017 ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் பிழையான GST வரி விபரங்களை கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

Actor Vijay Playback Singer in Tamil

ஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த ஆடல் கலைஞர். இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் தென்கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.

List of Songs Sung by Vijay in Tamil Movies

ஆண்டு பாடல் படம்
2021 குட்டி ஸ்ரோரி மாஸ்டர்
2019 நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும் பிகில்
2016 செல்ல குட்டி தெறி
2015 ஏன்டி ஏன்டி புலி
2014 லெட்ஸ் டெக் ய செல்ஃபி புல்ல கத்தி
2014 கண்டாங்கி கண்டாங்கி ஜில்லா
2013 வாங்கண்ணா வணக்கங்கண்ணா தலைவா
2012 கூகுள் கூகுள் துப்பாக்கி
2005 வாடி வாடி சச்சின்
2002 கொக்கா கோலா பகவதி
உள்ளத்தைக் கிள்ளாதே தமிழன்
2001 என்னோட லைலா பத்ரி
2000 மிசிச்சிப்பி நதி குலுங்க பிரியமானவளே
சின்னஞ்சிறு கண்ணுக்குள் நிலவு
இரவு பகலை கண்ணுக்குள் நிலவு
1999 தங்கநிறத்துக்கு நெஞ்சினிலே
1998 டிக் டிக் டிக் துள்ளி திரிந்த காலம்
ரோட்டுல ஒரு பெரியண்ணா
தம்மடிக்கிற ஸ்டைல பாத்து பெரியண்ணா
காலத்துக்கு ஒரு கனா வேலை
சந்திர மண்டலத்தை நிலாவே வா
நிலவே.. நிலவே நிலாவே வா
மௌரிய மௌரிய ப்ரியமுடன்
1997 ஓஹ பேபி பேபி மற்றும் என்னை தாலாட்ட வருவாளா காதலுக்கு மரியாதை
ஊர்மிளா ஊர்மிளா ஒன்ஸ் மோர்
1996 சிக்கன் கரே செல்வா
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி காலமெல்லாம் காத்திருப்பேன்
திருப்பதி போனா மொட்ட மாண்புமிகு மாணவன்
1995 பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி கோயம்புத்தூர் மாப்ளே
1994 தொட்டபெட்டா விஷ்ணு
1994 அய்யய்யா அலமேலு ஆவின் பசும்பாலு தேவா
1994 கோத்தகிரி குப்பம்மா தேவா

Actor Vijay Awards and Recognition in Tamil

இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கியப் பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

actor vijay images

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்

  • காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
  • திருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)

பிற விருதுகள்

  • கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது.
  • கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது.
  • கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது.
  • பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது.
  • போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது.
  • போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது.
  • வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது.
  • துப்பாக்கி, நண்பன்(2012) – விகடன் சிறந்த நடிகர் விருது.

Actor Vijay Social Media Link

Reference: Wikipedia