actor simbu images

நடிகர் சிலம்பரசனின் வாழ்க்கை வரலாறு

Name Silambarasan,
Born Name Silambarasan Thesingu Rajendar
Other Name Simbu, S.T.R
Age 38 (3 February, 1983)
Occupation Actor, Filmmaker, Musician, Voice Actor, Lyricist
Parents Name Thesingu Rajendar (Father)

Usha Rajendar (Mother)

Siblings Kuralarasan (Brother)

Ilakiya Rajendar (Sister)

ரசிகர்களால் சிம்பு மற்றும் S.T.R என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ‘சிலம்பரசன்’. அவர் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

actor simbu images

இவரது தந்தை விஜய டி. ராஜேந்தரின் சிலம்பரசனை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் 2002-இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.

actor simbu images

Actor Simbu Childhood Days in Tamil

சிலம்பரசன், தமிழ் திரைப்பட பிரபல நடிகரும், இயக்குனருமான விஜய டி. ராஜேந்திரன் மற்றும் உஷா ராஜேந்திரன் அவர்களுக்கு மூத்த மகனாக பிப்ரவரி 3ல், 1983 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் தமிழ் நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொங்கறப்பள்ளி என்னும் ஊரை சேர்ந்தவர். சிலம்பரசனுக்கு குறளரசன் என்னும் தமயனும், இலக்கியா என்ற சகோதிரியும் உள்ளனர்.

actor simbu images

Actor Simbu Early Life in Tamil

இவர் சென்னை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மற்றும் உயர்நிலை பள்ளியில் தனது பள்ளி படிப்பினை முடித்துள்ள இவர், பின்னர் கனடா நாட்டில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார்.

actor simbu images

Actor Simbu Entry in Cini Field in Tamil

இவரின் சிறுவயதில் தனது தந்தை இயக்கிய உறவைக்காத்த கிளி, மைதிலி என்னை காதலி,  என் தங்கை கல்யாணி, தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றுள்ளார் சிலம்பரசன் என்கிற சிம்பு.

நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், பின்னர் தனது பட்ட படிப்பினை முடித்துவிட்டு 2002-ஆம் ஆண்டு விஜய T . ராஜேந்திரன் இயக்கத்தில் காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கினார் சிலம்பரசன்.

actor simbu images

இப்படத்திற்கு பின்னர் தம் (2003), அலை (2003) என ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ஒரு பேசப்படும் நடிகராக நிரூபிக்கவில்லை. 2004-ஆம் ஆண்டு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான “கோவில்” படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானர்.

actor simbu images

அதை தொடர்ந்து தமிழில் இவர் நடித்த குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் தமிழ் ரசிகர்களின் மனதை வென்று மாபெரும் வெற்றி பெற்றது. 2006ம் ஆண்டு தமிழில் “வல்லவன்” திரைப்படத்தினை தானே இயக்கி, நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார் சிலம்பரசன். இந்த வெற்றி படங்களின் தொடர்ச்சியில் இவர் தமிழில் ஒரு முன்னணி நடிகராக அனைவராலும் புகழப்பட்டார்.

actor simbu images

ஒரு இயக்குனர் மற்றும் நடிகரின் மகனாக தமிழில் அறிமுகமாகினாலும் தனது விடாமுயற்சியாலும் திறமையாலும் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்று சிறந்த நடிகராக பிரபலமாகியுள்ளார் சிலம்பரசன் என்கின்ற சிம்பு.

இவர் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், இயக்குனர், படலாசிரியர் போன்ற துறைகளில் பணியாற்றி வந்துள்ள இவர், இசையமைப்பாளராக 2017-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த “சக்க போடு போடு ராஜா”  திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

actor simbu images

சிலம்பரசன் பாடலாசிரியாக பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். பின்னர் “லவ் ஆன்தம்” என்ற ஒரு ஆங்கில பாடலை பாடி உலகளவில் பிரபலமானார் சிம்பு.

நடிகராக பல படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், பாடலாசிரியராக 2006-ஆம் ஆண்டு “லூசு பெண்ணே” பாடலை எழுதி பாடியுள்ளார் சிம்பு. பின்னர் “காள காள”, “எவண்டி உன்ன பெத்த”, “வேர் இஸ் தி பார்ட்டி”, “பொண்டாட்டி”, “லவ் பண்ணலாமா வேணாமா” என பல பிரபலமான பாடல்களை எழுதி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றார் சிம்பு.

actor simbu images

Actor Simbu Film List in Tamil

ஆண்டு

திரைப்படம்

1984 உறவைக்காத்த கிளி,
1986 மைதிலி என்னை காதலி,
1987 ஒரு தாயின் சபதம்
1988 என் தங்கை கல்யாணி,
1992 எங்க வீட்டு வேலன்
1993 பெற்றேடுத்த பிள்ளை
1994 ஒரு வசந்த கீதம்
1995 தாய் தங்கை பாசம்,
1999 மோனிஷா என் மோனலிசா
2001 சொன்னால் தான் காதல
2002 காதல் வைரஸ்
2002 காதல் அழிவதில்லை
2003 தம்
2003 அலை
2003 கோவில்
2004 குத்து
2004 மன்மதன்
2005 தொட்டி ஜெயா
2006 சரவணா
2006 வல்லவன்
2008 காளை (திரைப்படம்)
2008 சிலம்பாட்டம் (திரைப்படம்)
2010 விண்ணைத்தாண்டி வருவாயா
2010 கோவா (திரைப்படம்)
2011 வானம்
2011 ஒஸ்தி
2012 போடா போடி
2015 வாலு
2015 இது நம்ம ஆளு
2016 அச்சம் என்பது மடமையடா
2017 அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
2018 செக்க சிவந்த வானம்
2018 காற்றின் மொழி
2019 வந்த ராஜாவாதான் வருவேன்
2021 ஈஸ்வரன்
2021 மாநாடு
2022 மகா
2022 வெந்து தணிந்தது காடு
2022 பத்து தல
2022 கொரோனா குமார்

actor simbu images

Actor Simbu Awards and Recognition

  • 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌருவப்படுத்தியுள்ளது.
  • 2011-ஆம் ஆண்டு ஐடிஎப்ஏ சிறந்த விருதுவானம் திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.
  • 2010-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான எடிசன் விருதுவிண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.
  • 2009-ஆம் ஆண்டு இசையருவி தமிழ் இசை விருது சிறந்த பாடலுக்காக “வேர் இஸ் த பார்டி” மற்றும் சிறந்த நடனத்திற்காக சிலம்பாட்டம் திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.
  • 2012-ஆம் ஆண்டின் “ஸ்டைலிஷ் ஸ்டார் ஆப் சவுத் சினிமா” என்ற விருதினை சர்வதேச தமிழ் நாடு திரைப்பட விருதினை சீமா விருது சிலம்பரசன் அவர்களுக்கு வழங்கியுள்ளது.
  • 2016-ஆம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை எடிசன் விருது அமைப்பு குழு இவருக்கு வழங்கியுள்ளது.

actor simbu images

Actor Simbu Social Media Link

Reference: Wikipedia