நடிகர் சரத்குமாரின் வாழ்க்கை வரலாறு

Name Sarathkumar
Born Name Ramanathan Sarathkumar
Age 67 (July 14, 1954)
Occupation Film Actor, Politician, Journalist, Bodybuilder
Parents Name Ramanathan (Father)

Pushpaleela (Mother)

Spouse Name Chaya (1984 to 2000 Divorce),

​Raadhika ​(2001 to present)

Children Varalaxmi Sarathkumar (Daughter),

Pooja Sarathkumar (Daughter),

Rahul Sarathkumar (Son)

சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவர் மற்றும் முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

actor sarathkumar images

அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்

Actor Sarathkumar Childhood Days in Tamil

எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954 சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்ந்தவர்.

actor sarathkumar images

Actor Sarathkumar Early Life in Tamil

கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார். இக்காலத்தில் சென்னை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Actor Sarathkumar Marriage Life in Tamil

சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் – சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது.

actor sarathkumar images

சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்.

Actor Sarathkumar Entry in Cini Field in Tamil

முதலில் தெலுங்கு திரைப்படமான சமாஜலோ ஸ்த்ரீ  படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழில்  நடிகர் கார்த்திக்குடன் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தில் நடித்தார். சரத்குமார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் புலன் விசாரணை. விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் வில்லனாக சரத்குமார் நடித்தார்.

actor sarathkumar images

அதன் பின்னர் விஜயகாந்தின் நண்பனாக கேப்டன் பிரபாகான் திரைப்படத்தில் நடித்தார். சேரன் பாண்டியன் அவருக்கு நல்ல படமாக அமைந்தது. அவருக்கு சிறப்பாக அமைந்த சில முக்கிய திரைப்படங்கள் மூவேந்தர், சூரியன், வேடன், நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை, ரகசியப் போலீஸ், கம்பீரம், ஏய், சாணக்யா, காஞ்சனா, ஐயா போன்ற படங்கள்.

actor sarathkumar images

Actor Sarathkumar Flim List in Tamil

ஆண்டு திரைப்படம்
1990 புலன் விசாரணை
1991 சேரன் பாண்டியன்
1992 சூரியன்
1993 வேடன்
1994 நாட்டாமை
1995 ரகசியப் போலீஸ்
1996 நேதாஜி
1997 அரவிந்தன்
1997 சூரிய வம்சம்
1998 மூவேந்தர்
1998 நட்புக்காக
2000 மாயி
2001 சமுத்திரம்
2004 கம்பீரம்
2004 ஏய்
2005 ஐயா
20016 பச்சைக்கிளி முத்துச்சரம்
2011 காஞ்சனா

Actor Sarathkumar Political Entry in Tamil

  • 1996ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். பின்பு 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாராளமன்ற வேட்பாளராக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
  • பின்பு 2001ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் 2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார்.
  • அத்தேர்தலில் திமுகவின் எதிர்கட்சியான அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டபோதிலும் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.
  • அவரது மனைவி ராதிகா அதிமுக கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006-ல் வெளியேற்றப்பட்டார்.
  • இதனைத் தொடந்து சரத்குமாரும் நவம்பர் 2006-ல் திரைப்பட வேலைகளை காரணம் காட்டி வெளியேறினார்.
  • பின்பு சரத்குமார் தனது தலைமையில் 31 ஆகத்து 2007 அன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் துவக்கினார்.

actor sarathkumar images

Actor Sarathkumar Awards and Recognition

  • 1993 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
  • 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சிறந்த நடிகருக்கான விருதுநாட்டாமை.
  • 1996 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருது.
  • 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சிறந்த நடிகருக்கான விருதுநட்புக்காக / சிம்மராசி.
  • 1994 ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருது- சிறந்த தமிழ் நடிகர் – நாட்டாமை.
  • 1998 ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருது- சிறந்த தமிழ் நடிகர் – நட்புக்காக.

actor sarathkumar images

Actor Sarathkumar Social Media Link

Reference: Wikipedia