actor jiiva images

நடிகர் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு

Name Jiiva
Born Name Amar Choudary
Age 38 (January 4, 1984)
Occupation Actor, Film Producer
Parents Name R.B Choudary (Father)

Mahjabeen (Mother)

Spouse Name Supriya
Children Sparsha Choudary (Son)

நடிகர் ஜீவா, (அமர்) என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகராக பணியாற்றி வருபவர். இவர் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ஆவார். இவரின் தம்பி ரமேஷ் ‘ஜித்தன்’ படத்தில் நடித்து தமிழ் திரையில் பிரபலமானவர். ஜீவா தமிழ் திரையுலகில் கோ, கற்றது தமிழ், ராம் போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

actor jiiva images

Actor Jiiva Childhood Days in Tamil

தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் ஆர். பி. சௌத்ரிக்கும் மற்றும் மஹஜபீனுக்கும் மூத்த மகனாக  ஜனவரி 4, 1984 ஆம் ஆண்டு பிறந்தார்.

actor jiiva images

இவரின் தம்பியான ‘ஜித்தன்’ ரமேஷ் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றி வருகிறார். இவரை தொடர்ந்து ஜீவன் மற்றும் சுரேஷ் என இரண்டு தம்பிகள் உள்ளனர்.

actor jiiva images

Actor Jiiva Early Life in Tamil

நடிகர் ஜீவா தனது பள்ளி படிப்பை T. நகரிலுள்ள ஆதர்ஷ் சீனியர் மேல்நிலை பள்ளியில் பயின்றார். இவர் தனது சிறுவயதில் இருந்து நடிப்பின் மேல் ஆர்வம் கொண்டு தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார்.

actor jiiva images

Actor Jiiva Marriage Life in Tamil

நடிகர் ஜீவா தனது தோழியான சுப்ரியா என்பவரை நவம்பர் 21, 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்பார்ஸா சௌத்ரி என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

actor jiiva images

Actor Jiiva Entry in Cini Field in Tamil

நடிகர் ஜீவா, அவரின் தந்தையின் தயாரிப்பு நிறுவனமான ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் 50-வது படமான ‘ஆசை ஆசையாய்’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் 2003-ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமாகியுள்ளார். ஆனால் இப்படத்திற்கு முன்பு 1990-ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

actor jiiva images

2003-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் மிக பெரிய வெற்றி பெற்ற ‘திக்திக்குதே’ படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்திலும் நாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களின் பலரின் கவனத்தை பெற்றார் ஜீவா. இவர் நாயகனாக அறிமுகமான ஆண்டு வெளியான இந்த இரண்டு படங்களும் இவருக்கு வர்த்தக ரீதியாக வெற்றி பெற்று தமிழில் பிரபலமானது.

இவரின் 3-வது படமான ‘ராம்’ இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகி தமிழில் மிக பெரிய வெற்றிப்பெற்றது. இப்படத்தில் நடித்தற்காக இவருக்கு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விருது அமைப்பு சிறந்த நடிகருக்கான விருதினை வழங்கி இவரை கௌரவப்படுத்தியது.

actor jiiva images

ஜீவாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படமாக இயக்குனர் அமீர் இயக்கிய ‘ராம்’ திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மற்றும் சுவாரஸ்ய திரைக்கதை தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து பிரபலமானது. இன்றும் இப்பட பாடல்களை பலர் விரும்புகின்றனர்.

actor jiiva images

2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராமின் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக நிரூபித்தது. இதில் தமிழ் படித்த பட்டதாரியாக ஜீவா நடித்து அசத்தியிருப்பர். இன்றைக்காலத்தில் தமிழ் மொழியின் நிலை மற்றும் தமிழ் படித்தவனை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்று கூறும் திரைப்படம்.

actor jiiva images

ஒரு நல்லா படிக்கிற பையன் தமிழ் படிக்கவந்த ஏன்டா தமிழ் படிக்க வந்தணு தமிழ் H.O.D ஏ கேக்குற லெவெல்ல தான் அன்னைக்கு தமிழ் டிபார்ட்மென்ட் இருந்துச்சி“, இந்த வசனம் ரொம்ப யதார்த்தமாகவும், உண்மையாகவும் இருந்தது. திரைப்படத்தில் ஜீவாவின் பின்னணி குரல் நன்றாக இருந்தது.

இந்த படத்தில் ஜீவா ‘பிரபாகர்’ கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். தனக்கு வந்த கடிதத்தை வைத்து தன் காதலியை தேடிச் செல்லும்போது பறவையே எங்கு இருக்கிறாய்’ என்ற பாடல், நா. முத்துகுமாரின் பாடல் வரிகள் நம்மை துங்கவிடாது. ஒரு சிறுகதை படித்த உணர்வு தோன்றும்.

actor jiiva images

இவரின் திரைப்பயணத்தில் அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்களான ராம், ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ ஆகிய படங்கள் இவரை ஒரு முன்னணி நாயகனாக உயர்த்தியுள்ளது.

2012-ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்பட முதல் சூப்பர் ஹீரோ படமான ‘முகமூடி’ திரைப்படத்தில் நாயகனாக நடித்து பிரபலமாகியுள்ளார். இப்படம் தான் தமிழ் திரையுலகில் உருவான முதல் சூப்பர் ஹீரோ படமாகும். பின்னர் 2016-ஆம் ஆண்டு ‘போக்கிரி ராஜா’ என்ற திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்படம் இவரது 25வது தமிழ் திரைப்படமாகும்.

Actor Jiiva Film List in Tamil

ஆண்டு

திரைப்படம்

2003

ஆசை ஆசையாய்

2003

தித்திக்குதே

2005

ராம்

2006

டிஷ்யூம்

2006

கீர்த்தி சக்கரா

2006

அரண்

2006

2007

பொறி

2007

கற்றது தமிழ்

2007

ராமேஸ்வரம்

2008

தெனாவட்டு

2009

சிவா மனசுல சக்தி

2010

கச்சேரி ஆரம்பம்

2010

பாஸ் என்கிற பாஸ்கரன்

2011

சிங்கம் புலி

2011

கோ

2011

ரௌத்திரம்

2011

வந்தான் வென்றான்

2012

நண்பன்

2012

நீ தானே என் பொன்வசந்தம்

2012

முகமூடி

2013

டேவிட்

2013

என்றென்றும் புன்னகை (திரைப்படம்)

2014

ஜில்லா

2014

யான்

2016

போக்கிரி ராஜா

2016

கவலை வேண்டாம்

2016

கடவுள் இருக்கான் குமாரு

2017

சங்கிலி புங்கிலி கதவ தொற

2018

கலகலப்பு 2

2019

கொரில்லா

2019

கீ

2020

சீறு

2020

ஜிப்ஸி

2021

களத்தில் சந்திப்போம்

2021

83

2022

கோல்மால்

2023

ஜெமினி கணேசன்

2024

வரலாறு முக்கியம்

actor jiiva imagesActor Jiiva Awards and Recognition

இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான  ‘ராம்’ பெரிய வெற்றியை கண்டுள்ளது. இப்படத்தில் நடித்தற்காக இவருக்கு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விருது அமைப்பு சிறந்த நடிகருக்கான விருதினை வழங்கி இவரை பெருமைப்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசனை தொடர்ந்து இவர் மட்டுமே இந்த விருதினை பெற்றுள்ளார்.

Actor Jiiva Social Media Link

Reference: Wikipedia