actor jayam ravi images

நடிகர் ஜெயம் ரவியின் வாழ்க்கை வரலாறு

Name Jayam Ravi
Born Name Ravi Mohan
Age 40 (September 10, 1980)
Occupation Actor
Parents Name Amritha Mohan (Father)

Varalakshmi Mohan (Mother)

Spouse Name Aarthi
Children Aarav (Son)

Ayaan (Son)

ஜெயம் ரவி தமிழ் திரைப்பட நடிகர் ஆவர், தனது நடிப்பின் திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ளவர். அவர் தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ‘ஜெயம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்.

actor jayam ravi images

அடுத்து ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி’ திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த ‘அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி’ என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.

Actor Jayam Ravi Childhood Days in Tamil

இவர் மதுரையில் 1980-ஆம் ஆண்டு வெட்டறான் திரைப்பட தொகுப்பாளர் மோகன், வரலட்சுமி மோகன் ஆகியோருக்கு மகனாக பிறந்துள்ளார். இவரது அண்ணன் எம். ராஜா பிரபல இயக்குனர் ஆவர், மற்றும் ரோஜா என்ற சகோதரியும் உள்ளனர். இவர் சென்னையில் தனது பள்ளிப்படிப்பினை முடித்துள்ள இவர், சென்னை லொயோலா கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார்.

actor jayam ravi images

Actor Jayam Ravi Marriage Life in Tamil

ஜெயம் ரவி ஜூன் 4, 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆரவ் மற்றும் அய்யன் என இருமகன்கள் உள்ளனர்.

actor jayam ravi images

Actor Jayam Ravi Entry in Cini Field in Tamil

ஜெயம் ரவி 2001-ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

actor jayam ravi images

இவர் சிறுவயதில் ‘பாவ பாவமரிடி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் நடிப்பு அனுபவத்தை பெற்றுள்ளார்.

இவர் தமிழ் திரையுலகில் இவரின் அண்ணன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு இவரின் தந்தை மோகன் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

actor jayam ravi images

இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று தமிழகத்தில் பிரபலமாகியுள்ளார்.

ஒரு எதார்த்தமான காதல் திரைக்கதையில் அறிமுகமான இவர், ஜெயம் திரைப்படத்தினை தொடர்ந்து நகைச்சுவை, காதல் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் நடித்து புகழ் பெற்ற பின்னரே அதிரடி நாயகனாக திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார்.

actor jayam ravi images

ஒரு அதிரடி படமாக ஹாலிவுட் தரத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பேராண்மை’ திரைப்படத்திலிருந்த்து இவர் அதிரடி நாயகனாகவும் தமிழ் திரையுலகில் சித்தரிக்கப்பட்டார். பின்பு அடுத்தடுத்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் இவரும் ஒருவராவார்.

actor jayam ravi images

Actor Jayam Ravi Film List in Tamil

ஆண்டு

திரைப்படம்

2018 டிக் டிக் டிக்
2015 பூலோகம்
2015 தனி ஒருவன்
2015 ரோமியோ ஜூலியட்
2014 பூலோகம்
2014 நிமிர்ந்து நில்
2014 நினைத்தது யாரோ
2013 ஆதிபகவன்
2011 எங்கேயும் காதல்
2010 தில்லாலங்கடி
2009 பேராண்மை
2008 தாம் தூம்
2008 சந்தோஷ் சுப்பிரமணியம்
2007 தீபாவளி
2006 சம்திங் சம்திங் (உனக்கும் எனக்கும்)
2006 இதயத் திருடன்
2005 மழை
2005 தாஸ்
2004 எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி
2003 ஜெயம்

actor jayam ravi images

Actor Jayam Ravi Awards and Recognition

  • ஜெயம் ரவி 2004-ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.
  • அதை தொடர்ந்து பேராண்மை, ரோமியோ ஜுலேட், தனி ஒருவன், பூலோகம், அடங்காமாறு படத்திற்காக பல விருதுகளை சீமா, எடிசன், விகடன் பிலிம்பேர் என பல தரப்பு அமைப்புகளிடம் இருந்து பல விருதுகளை வென்றுள்ளார்.

Actor Jayam Ravi Social Media Link

Reference: Wikipedia