actor arya images

நடிகர் ஆர்யாவின் வாழ்க்கை வரலாறு

Name Arya
Born Name Jamshad Cethirakath
Age 41 (11 December, 1980)
Occupation Actor, Producer
Parents Name Umar Cethirakath (Father)

Jameela Cethirakath (Mother)

Spouse Name Sayyeshaa
Children Ariana (Daughter)
Siblings Sathya

ஆர்யா தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

actor arya images

அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25-க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

Actor Arya Childhood Days in Tamil

நடிகர் ஆர்யா டிசம்பர் 11, 1980 ஆம் ஆண்டு காசர்கோடு, கேரளாவில் உமர் செதிராகாந்த் மற்றும் ஜாமிலா செதிரா காந்த்திற்கு மகனாக பிறந்தார். இவருக்கு சத்யா, என்ற ஒரு இளைய சகோதரன் உள்ளார். அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். ஆர்யாவின் இயற்பெயர் ஜம்ஷத் சேதிராகத் என்பதாகும்.

actor arya images

Actor Arya Early Life in Tamil

நடிகர் ஆர்யா சென்னையிலுள்ள கிரேஸிஸ்ண்ட் பொறியியல் கல்லூரியில் (B.Tech in Computer Science and Engineering) படித்தார். அவர் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமிருந்ததால் தனது விடாமுயற்சியால் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

Actor Arya Marriage Life in Tamil

ஆர்யா நடிகை சாயிசா என்பவரை மார்ச் 10, 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்ததில் இருவருக்கும் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு அரியானா என்ற ஒரு பெண் குழந்தை 25 ஜூலை, 2021 ஆம் ஆண்டு பிறந்தது.

actor arya images

Actor Arya Entry in Cini Field in Tamil

இவர் 2003ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த திரைப்படத்தில் சாம், அசின், பூஜா, லைலா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சிறு பிரச்சனை காரணமாக 2005ஆம் ஆண்டு வெளியானது.

actor arya images

இந்த திரைப்படம் வருவதற்கு முன்பு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், நவ்தீப் மற்றும் சமிக்சா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. இந்த திரைபப்டத்தில் நடித்ததற்க பிலிம்பேர் புதுமுக நடிகருக்கான விருதை வென்றார்.

அதை தொடர்ந்து அதே ஆண்டில் ஒரு கல்லூரியின் கதை என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

actor arya images

2006ஆம் ஆண்டு கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பட்டியல் என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகர் பரத் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக பூஜா மற்றும் பத்மப்பிரியா நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தது. நல்ல வசூலும் செய்தது.

actor arya images

2009ஆம் ஆண்டு சர்வம் மற்றும் பாலா இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் ருத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைபப்டத்தில் முதலில் நடிப்பதற்காக அஜித் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். இந்த திரைப்படம் காசி மற்றும் தமிழ்நாட்டில் படபிடிப்பு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஆர்யா ஒரு அகோரியாக நடித்துள்ளார்.

actor arya images

இவர் 2010ஆம் ஆண்டு மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு போன்ற திரைப்படங்களிலும் வருடு என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் 2011ஆம் ஆண்டு உருமி, அவன் இவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு வேட்டை, சேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜா ராணி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆரம்பம் திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து அஜித் குமார், நயன்தாரா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

actor arya images

2021 ஆம் ஆண்டு ஆர்யாவின் எதார்த்தமான நடிப்பில் வெளிவந்த சர்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுது. வசூல் ரிதியாக மாபெரும் வெற்றி படமாக மாறியது.

Actor Arya Film List in Tamil

ஆண்டு திரைப்படம்
2003 அறிந்தும் அறியாமலும்
2004 ஒரு கல்லூரியின் கதை
2005 உள்ளம் கேட்குமே
2006 கலாபக் காதலன்
2006 பட்டியல்
2006 வட்டாரம்
2007 ஓரம் போ
2009 நான் கடவுள்
2009 சிவா மனசுல சக்தி
2009 சர்வம்
2010 வருடு
2010 மதராசபட்டினம்
2010 காதல் சொல்ல வந்தேன்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன்
2010 சிக்கு புக்கு
2011 அவன் இவன்
2012 வேட்டை
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி
2012 சேட்டை
2013 ராஜா ராணி
2013 இரண்டாம் உலகம்
2013 ஆரம்பம்
2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம்
2014 ஜீவா
2014 மீகாமன்
2015 புறம்போக்கு
2015 யட்சன்
2015 வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
2016 பெங்களூர் நாட்கள்
2016 நம்பியார்
2017 கடம்பன்
2018 கஜினிகாந்த்
2019 மகாமுனி
2019 காப்பான்
2021 டெடி
2021 சர்பட்டா பரம்பரை
2021 அரண்மனை  3
2021 எனிமி

actor arya images

Actor Arya Awards and Recognition

  • ஆர்யா அறிந்தும் அறியாமலும் திரைபப்டத்தில் நடித்ததற்க பிலிம்பேர் புதுமுக நடிகருக்கான விருதை வென்றார்.
  • இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் என்ற திரைப்படம் தமிழக அரசு திரைப்பட விருதுகள், விஜய் விருதுகள், போன்ற பல விருதுகளை அவருக்கு வாங்கித்தந்துள்ளது.

actor arya images

Actor Arya Social Media Link

Reference: Wikipedia