நடிகர் அருண் விஜயின் வாழ்க்கை வரலாறு

Name Arun Vijay
Born Name Arunkumar
Age 44 (November 19, 1977)
Occupation Actor
Parents Name Vijayakumar (Father)

Muthukannu (Mother)

Spouse Name Aarathi Arun
Children Purvi Vijay (Daughter)

Arnav Vijay (Son)

அருண் விஜய் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க மற்றும் என்னை அறிந்தால்ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

actor arun vijay images

Actor Arun Vijay Childhood Days in Tamil

அருண் விஜய் விஜய் குமார் குடும்பத்தில் உள்ள ஒரே மகன். இவர் நடிகர் விஜயகுமாருக்கும் அவரது முதல் மனைவி முத்து கண்ணுக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் நவம்பர் 19 ஆம் தேதி 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு கவிதா மற்றும் அனித்தா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இவருடைய இன்னொரு தாய் மஞ்சுளா விஜயகுமார் 1970 முதலே 100 படங்களுக்கு மேல் நடித்தவர். அவர்களுக்கு வனிதா, ப்ரீதா, மற்றும் ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

actor arun vijay images

அருண் விஜய்யின் உண்மை பெயர் அருண்குமார். அருண் விஜய், அருண்குமார் என்ற பெயர் இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.

Actor Arun Vijay Early Life in Tamil

அருண்விஜய் எக்மோரில் உள்ள டான் போஸ்கோ (Don Bosco school) என்ற பள்ளியில் படித்தார். அதன் பிறகு  லயோலா கல்லூரியில் (Loyola College) தனது பட்டப் படிப்பினை முடித்தார்.

actor arun vijay images

Actor Arun Vijay Marriage Life in Tamil

அருண் விஜய் அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்ற பெண்ணை மணமுடித்தார். ஆர்த்தி மோகன் என்எஸ். மோகன் (flimproducer) மகள் ஆவார். அருண் விஜய் மற்றும் ஆர்த்தி அவர்களுக்கு பூர்வி என்ற மகளும் மற்றும்  ஆரனவ் விஜய் என்ற மகனும் உள்ளனர்.

actor arun vijay images

Actor Arun Vijay Entry in Cini Field in Tamil

அருண் விஜய்யின் திரைப்பயணம் 1995 ஆம் ஆண்டு ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் தொடங்கியது. கனடா மொழியில் ‘சக்கரை யோகா’ என்ற படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். தெலுங்கு மொழியில் ‘புரூஸ் லீ’ என்ற படத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு அறிமுகமானார்.

actor arun vijay images

இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்பகாலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகனாக நிரூபிக்க கடினமாக உழைத்தார், ஆனாலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பிரியம், கங்கா கவுரி, காத்திருந்த காதல் போன்ற திரைப்படம் சிறிது பேசப்பட்டது. பாண்டவர் பூமி, இயற்கை போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றிக்கண்டாலும் அத்திரைப்படத்தில் அவர் குணச்சித்திரம் வேடங்களிலேயே நடித்தார்.

actor arun vijay images

அதன் பின் பல ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு மலை மலை, மாஞ்சா வேலு, தடையறத் தாக்க மற்றும் என்னை அறிந்தால், குற்றம் 23, தடம் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை தந்தார். “இன்று வளர்ந்து வரும் பல நடிகர்களுக்கு அருண் விஜய் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்”.

இப்பொழுது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடலமைப்பு கொண்ட நடிகர்களில் இவரும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனது உடல் அமைப்புக்காக 6 மணி நேரம் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார்.

actor arun vijay images

Actor Arun Vijay Film List in Tamil

ஆண்டு திரைப்படம்
1995 முறை மாப்பிள்ளை
1996 பிரியம்
1997 கங்கா கவுரி
1997 காத்திருந்த காதல்
1998 துள்ளித் திரிந்த காலம்
2000 கண்ணால் பேசவா
2000 அன்புடன்
2001 பாண்டவர் பூமி
2002 முத்தம்
2003 இயற்கை
2004 ஜனனம்
2006 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
2007 தவம்
2008 வேதா
2009 மலை மலை
2010 துணிச்சல்
2010 மாஞ்சா வேலு
2012 தடையறத் தாக்க
2015 என்னை அறிந்தால்
2017 குற்றம் 23
2018 செக்கச்சிவந்த வானம்
2019 தடம்
2019 சாஹோ

actor arun vijay images

Actor Arun Vijay Awards and Recognition

நடிகர் அஜித்குமார் மற்றும் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்காக தமிழில் சிறந்த வில்லன் என்ற விருதுகளை அதிகம் பெற்றுள்ளார்.

actor arun vijay images

Actor Arun Vijay Social Media Link

Reference: Wikipedia