Aarilirunthu Arubathu Varai cover

Movie: Aarilirunthu Arubathu Varai (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Sailaja and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண்: மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ.ஏ..
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண்: ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண்: தீபத்தை ஏற்றினான்
பாபத்தை போக்கினான்
வாழ்வெனும் பெரும்கடலில்
போராடினான்

பெண்: தேனியைப் போலவே
நாள் எங்கும் ஓடினான்
அன்பெனும் குலவிளக்காய்
ஒளி வீசினான்

பெண்: காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
நம்பிக்கை உள்ளத்தில் பூவாக மாறும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண்: ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண்: எதிர் நீச்சல் போடவும்
புது வாழ்வு தேடவும்
சின்னஞ்சிறு கிள்ளை
இவன் துணிந்தான் அம்மா

பெண்: ஏன் என்று கேட்கவும்
நான் என்று கூறவும்
பொறுப்புடனே பெருஞ்சுமையை
சுமந்தான் அம்மா

பெண்: நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்
நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்

பெண்: எந்நாளும் துணை உண்டு
நீ வாழ வேண்டும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண்: ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண்: மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ.ஏ..
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்