Aagaya Thamaraigal cover

Movie: Aagaya Thamaraigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே.

பெண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே.

பெண்: நீர் அருவிகள் ஒர் நதியென ஏன் நடக்கிறது
ஆண்: வான் கடலெனும் தன் துணைவனை தான் கலந்திடவே

பெண்: செந்தாழம்பூ கார்காலம் வந்ததும் கூத்தாடுதே யாரைக்கண்டு மின்னல் என்னும் தன் காதல் நாயகன் வானத்திலே மின்னக்கண்டு
பெண்: அதில் தடைக்கோடு உண்டு.

ஆண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
பெண்: மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே.

ஆண்: நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும் நாம் இணைந்திடவே
பெண்: உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே

ஆண்: என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம் உன் கண்களே சொல்கின்றதே
பெண்: உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது உன் மார்பிலே சாய்கின்றதே
ஆண்: மனம் சதிராடும் காலம்…

பெண்: ஆனந்த வெள்ளத்திலே…
ஆண்: ஆனந்த வெள்ளத்திலே…

பெண்: தேன் சுவைதனை பூ மலர்ந்தனை யார் பிரித்திடுவார்
ஆண்: யார் பிரித்தினும் வெண் நிலவினை வான் பிரிந்திடுமோ

பெண்: ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள் எந்நாளுமே மாறாதய்யா
ஆண்: நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள் எந்நாளுமே நீங்காதம்மா
பெண்: கண்ணா அது தானே காதல்…

ஆண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே….

பெண்: ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…