Lyricist Madhan Karky

ஆழலிலோ ஆழலிலோ பாடல் வரிகள்

ஆழலிலோ ஆழலிலோ நீ பாட மறந்திட கேட்டால் இவள்
கண்ணே என்ன முத்தே என்ன நீ கொஞ்சாத உன் செல்ல துகள் இவள்

ஆழலிலோ ஆழலிலோ நீ பாட மறந்திட கேட்டால் இவள்
சொல்லாமலே சொல்லாமலே அம்மா என்றுதான் உன்னை அழைப்பவள்

நீ வீசிய புன்னகை பின்னால் வருதோ கேள்வி
ஒன்றை நெஞ்சில் ஏந்தி உன்னை பார்க்குதோ

காதல் அதை சொல்லவே உயிர் வேண்டாம் என்னவே
காத்திருந்த பாத்திருந்தே காதலை சொல்லுதோ

உன் கண்ணில் பட உன் கைகள் தொட
முத்தங்கள் இட பார்கின்றதோ

இங்கேது வழி இங்கேது மொழி இல்லாத வலி முள்ளாகுதோ
மௌனம் ஒன்று சொல்லாகுதோ

உன் போல் அவள் ஆவதே உன்னை உணர
போதவில்லை என்றுணர்ந்து உன் காற்றாகிறாள்

நீ ஓய்வென சாய்கையில் உன் தூக்கம் அவளே
உந்தன் கனவில் தன்னை தேடி பாதங்கள் தேய்கிறாள்

வண்ணங்கள் இல்லா உன் சின்ன நிலா தன்னோடு
உலா வா என்றதோ தீ நின்ற அகல் உன் வாழ்வின் நகல்
உன்னுள்ளே தன்னை விதைக்குதோ மீண்டும் உன்னை உதைக்குதோ…

Movie: Diya
Lyrics: Madhan Karky
Music: Sam C. S.