Aaha Ayiram Sugam Thedi Song Lyrics

Movie: Yaaro Ezhuthiya Kavithai (1986)
Music: Anand Sankar
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram and K. J. Jesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவி முகமோ இளமை பாடும் காதலின் கதை நான் எழுதும் கவிதை வந்ததோ

பெண்: ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ இளமை பாடும் காதலின் கதை நீ எழுதும் கவிதை வந்ததோ

பெண்: உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
ஆண்: பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம் சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்

பெண்: தூது போகும் பேதை மனங்களில் பாடும் வானம்பாடி நீயோ
ஆண்: ராக தேவன் கோயில் மணிகளில் சூடும் காதல் கிரீடம் நீயோ மீன்.வலை.விழியோ…

பெண்: ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ
ஆண்: இளமை பாடும் காதலின் கதை நான் எழுதும் கவிதை வந்ததோ

ஆண்: பாதம் வந்து போகும் வழிகளில் பூவில் பாதை போடலாமா
பெண்: போகும் பாதை யாவும் அழகிய தேகமாக மாறலாமா நான்.துணை.வரவோ…

பெண்: காதல் நோயில் வாடும் மனதினை கைகள் வந்து காக்க வேண்டும்
ஆண்: கைகள் வந்து காக்கும் இடங்களை நானும் இங்கு பார்க்க வேண்டும் தேன்.மழை.விழுமோ

பெண்: ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ
ஆண்: இளமை பாடும் காதலின் கதை நீ எழுதும் கவிதை வந்ததோ..
பெண்: வந்ததோ.

ஆண்: லால லாலால
பெண்: லாலால லா…(3)