Arunagirinathar cover

Movie: Arunagirinathar (1964)
Music: G. Ramanathan
Lyricists: T. K. Krishnasami
Singers: T. M. Soundarajan and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ………….

ஆண்: தீம் திணதோம் ததீம்
கிணதோம் தததஜம் தத்தணம்
தத்ததும் ததிகிணதோம்
தகதஜம் தகதணம் தகததும்
ததிகிணதோம்
தத்தஜம் ததிகிணதோம் தா
தகதஜம் ததிகிணதோம் தா
தகதஜம் ததிகிணதோம் தா

ஆண்: ஆட வேண்டும் மயிலே
நான் ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

பெண்: அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே

ஆண்: இளமை இருக்கும் புது எழிலிருக்கும்
ஆ..ஆ..
இளமை இருக்கும் புது எழிலிருக்கும்
என்னை இழுக்கும் இரு விழியிருக்கும்
இளமை இருக்கும் புது எழிலிருக்கும்
என்னை இழுக்கும் இரு விழியிருக்கும்
இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும்
இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும்
ஆட வேண்டும் மயிலே

பெண்: அவனோடு உறவாடி
அன்போடு நான் சேர்ந்து
ஆட வேண்டும் மயிலே

ஆண்: சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்

பெண்: சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்

ஆண்: விரிமார்பும் வித்தார சொல்லழகும்
விரிமார்பும் வித்தார சொல்லழகும்
முழுமதியும் முத்தாரப் பல்லழகும்
இருவர்: முழுமதியும் முத்தாரப் பல்லழகும்

ஆண்: கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கருணை பிறக்கும் தனி உடலமைப்பும்
கண்டதும் மனமெலாமழகிலே
மலர்ந்துடல் சுகம் பெற
குலவிட ஜோதியாய் வீசிடும் நாதனுடன்
தாம் ததீம் ததீம் ததீம் தகிடவென

இருவர்: ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே