இயக்கனர் சேரனின் வாழ்க்கை வரலாறு 

Name Cheran
Born Name Cheran Pandian
Age 51 (December 12, 1970)
Occupation Film Director, Film Producer, Actor, Lyricist
Parents Name Pandian (Father)

Kamala (Mother)

Spouse Name Selvarani
Children Nivedha (Daughter)

Damini (Daughter)

சேரன் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004) மற்றும் தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

director cheran images

இவர் சொல்ல மறந்த கதை (2000), தவமாய் தவமிருந்து (2005), பொக்கிசம் (2009), முரண் (2011) போன்ற பல திரைப்பட ங்களிலும் கதாநாகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

Film Director Cheran Childhood Days in Tamil

சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் டிசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார்.

Film Director Cheran Early Life in Tamil

திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

director cheran images

Film Director Cheran Marriage Life in Tamil

நடிகர் சேரன் செல்வராணி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவருக்கும் நிவேதா பிரியதர்ஷினி  மற்றும் டிமினி என்ற இரு மகள்கள் உள்ளன.

Film Director Cheran Entry in Cini Field in Tamil

உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன் மற்றும் மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து அதை தொடர்ந்து பொற்காலம் (1999), வெற்றிக் கொடி கட்டு (2000), பாண்டவர் பூமி (2001) போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே திரைப்படம் இயக்கினார்.

director cheran images

இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006), ஆடும் கூத்து (2007), முரண் (2011) போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு இயக்குனர் தங்கர் பச்சான் என்பவர் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்புத்திறன் பரவலாக பேசப்பட்டு பாராட்டும் பெற்றார்.

பின்னர் பொக்கிசம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது. அழைப்புக் கடிதம் பிரச்சனையால் அதுவும் கைவிடப்பட்டு, பின்னர் அதில் இவரே கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கவும் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

director cheran images

அதன் பிறகு 2004 இல் ஆரம்பித்த பொக்கிசம் இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் (2008), ராமன் தேடிய சீதை (2008), யுத்தம் செய் (2011), திருமணம் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடிகராக நடித்தார்.

Film Director Cheran Film List in Tamil

ஆண்டு திரைப்படம்
1997 பாரதி கண்ணம்மா
1997 பொற்காலம்
1998 தேசிய கீதம்
2000 வெற்றிக் கொடி கட்டு
2001 பாண்டவர் பூமி
2002 சொல்ல மறந்த கதை
2004 ஆட்டோகிராப்
2005 தவமாய் தவமிருந்து
2006 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
2007 மாயக்கண்ணாடி
2007 ஆடும் கூத்து
2008 பிரிவோம் சந்திப்போம்
2008 ராமன் தேடிய சீதை
2009 பொக்கிசம்
2011 யுத்தம் செய்
2011 முரண்
2013 சென்னையில் ஒரு நாள்
2013 மூன்று பேர் மூன்று காதல்
2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம்
2015 ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை
2016 ராஜாதி ராஜா
2019 திருமணம்
2020 மிக மிக அவாசரம்
2020 ராஜாவுக்கு செக்

director cheran images

Film Director Cheran Awards and Recognition

இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004) மற்றும் தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்தன.

Actor Cheran Social Media Link

Reference: Wikipedia