வெற்றி வேல் வீர வேல் பாடல் வரிகள்
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல்…
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்.. ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்…
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீர வேல்
எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி காணும் எங்கள் சக்தி வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி காணும் எங்கள் சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்…
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்…
Movie: Kandhan Karunai
Lyrics: Kannadasan
Music: K V Mahadevan