5 எழுத்துக்களுக்கு ரூ.5 லட்சம்... கவிஞர் வைரமுத்து அறிவித்த பரிசுப்போட்டி..!

‘மகா கவிதை’ என்ற தலைப்பில் அறிவுப்போட்டி ஒன்றை நடத்தப்போவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து ‘மகா கவிதை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘மகா கவிதை’ என்ற தலைப்பில் அறிவுப்போட்டி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

இதன்படி ‘மகா கவிதை’ என்ற வார்த்தையில் உள்ள 5 எழுத்துக்களின் உள்ளடக்கத்தையும் கண்டறிந்தால், ஒரு எழுத்திற்கு ஒரு லட்சம் வீதம் மொத்தம் 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

போட்டியில் பங்கு பெற விரும்புவோர் 5 எழுத்துக்களின் உள்ளடக்கங்களையும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு நவம்பர் 30-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும், பரிசு வெல்பவர்களுக்கு, ரூ.5 லட்சம் பரிசை விழா மேடையில் வைத்து வழங்குவோம் எனவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.