Perunthil Nee Song Lyrics in Tamil
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
ஆள் இல்லா நல் இரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
ஹ்ம்ம் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே ஹ்ம்ம் ம்ம்ம்
தினமும் காலையில் எனது வாசலில் இருக்கும்
நாளிதழ் நீதானே
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய் பிறை போல் வரும் நக கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம்
அன்பே அன்பே நீதானே பிடித்தவர் தருகிற பரிசு
பொருளும் அன்பே அன்பே நீதானே
ஹ்ம்ம் ம்ம் எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
ஆஆ ஆஆ பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
ஆள் இல்லா நல் இரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே
ஆஆ பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்...
Movie: Pori
Lyrics: Yugabharathi
Music: Dhina
0 Comments