Eppadi Irundha Yem Manasu Song Lyrics in Tamil
எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
எப்படி இருந்த என் வயசு அடி இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா
உனது சிரிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே
அலையும் உனது விழியை பார்த்தால் பயமாய் இருக்கிறதே
அரிது அரிது இளமை அரிது விலகி போனால் நியாயமா
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது
எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
எப்படி இருந்த என் வயசு அடி இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா
ஏய் சொட்டு சொட்டுத் தேனா நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா
திட்டு கிட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால்குடம் கெட்டு போகும் வீணா
அழகு என்பதே பருகத் தானடி எனது ஆசைகள் தப்பா
நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை
நினைத்துக் கொள் எனை நட்பா
இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது
ஏய் கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்னா
ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா
கொக்கு வந்து போனா அட நெஞ்சம் சொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா
முறுக்குப் போலவே இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே
துடுப்புப் போலவே இருக்கும் கைகளால்
அடிக்கத் தோன்றுதே அன்பே
நடையோ உடையோ ஜடையோ இடையோ
எதுவோ என்னைத் தாக்குதே
மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது...
Movie: Santosh Subramaniam
Lyrics: Viveka
Music: Devi Sri Prasad
0 Comments