Yennachu Yedhachu Song Lyrics in Tamil
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி
பூவாச்சு பொண்ணாச்சு பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா ஆச்சு என் மூச்சு
உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட
மழை வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வாடி மனசோட
நடு இரவில ஆள் இல்ல துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்தது இல்ல இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேனே
உன் ஆசை நான் என் ஆசை நீ பேராசை ஆவோமா
கண் மூடியே கை கோர்த்து தான் காணமல் போவோமா
எல்லோரும் தூங்கும் போது காதல் கண்ணில் தூக்கம் இல்ல
பொல்லாத காதல் வந்தால் அக்கம் பக்கம் பார்பதில்ல
அன்பே உன் கண்கள் ரெண்டும் என் காதல் கண்ணாடி
சூரியன் கண் பார்க்கும் முன்னே நீ வாட முன்னாடி
என்னோடு நீ உன்னோடு நான் வேறென்ன சந்தேகம்
கையோடு வா பின்னிக் கொள்ள நீதாண்டா சந்தோசம்
நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன
என்னோடு நானே இல்ல என்ன பண்ண என்ன பண்ண
பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத
உன் மீச முள்ளாலே ரோசாவே குத்தாத
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி
பூவாச்சு பொண்ணாச்சு பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா ஆச்சு என் மூச்சு
உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட
மழை வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வாடி மனசோட
நடு இரவில ஆள் இல்ல துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்தது இல்ல இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேனே...
Movie: Trisha Illana Nayanthara
Lyrics: Kabilan
Music: G. V. Prakash Kumar
0 Comments