Lyricist Yugabharathi

என் ஆள பாக்க போறேன் பாடல் வரிகள்

என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன்..
என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன்..

அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே… என்ன தரபோறேன்..

வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்ல போறேன் 
கூட்டிக்கிட்டு போயிடுனு சொல்ல போறேன்
இததான் எதிர்பாத்து நான் கிடந்தேன் உயிர் வோ்த்து

என சொல்லி ஆசையில் அல்லாடுவான் 
மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்
அத நான்.. பாத்தே.. அழபோறேன்..
என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன்..

உன்னாலதான் தூங்கலனு சொல்லப் போறேன்
சோறு தண்ணி சேரலன்னு சொல்லப் போறேன் 
புதுசா புழுகாம ரொம்ப பெருசா வழியாம

அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா ஆக போகுறனு அப்பாவியா 
நானே… கேட்டு.. வரப்போறேன்..

ஓ என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே … என்ன தரபோறேன்…

Movie: Kayal
Lyrics: Yuga Bharathi
Music: D. Imman

Leave a Reply