Yedho Ondru Song Lyrics in Tamil - ஏதோ ஒன்று

Yedho Ondru Song Lyrics in Tamil

Lyricist Vaali

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் 
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் 
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன் 

உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்

உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி
லாஹி ஒரு ஆசை மனதுக்குள்
போதும் அதை மட்டும் நீ தந்தால் போதும்

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் 
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்

நல்ல மனம் உன் போல் கிடையாது 
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான் இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய்தான் வரலாமா தள்ளி நின்று துன்பம் தரலாமா 
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச என்னை தனியே விடலாமா

குழந்தையும் குமரி என்றாயாச்சே கொஞ்சிடும் பருவம் போயாச்சே 
மனம் போலே மகள் வாழ நீ வாழ்த்தும் தாய் ஆச்சே ஓஹோ… ஹோ

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் 
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன் 

உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன் 
உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி
ஒரு ஆசை மனதுக்குள் போதும் அதை மட்டும் தந்தால் போதும்

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே வானவில்லை
உடையாய் தைப்பேனே உனக்காக
எதும் செய்வேன் நீ எனக்கென செய்வாயோ

இந்த ஒரு ஜென்மம் போதாது ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது 
அந்த தெய்வம் உன்னை காக்க தினம் தொழுவேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு இந்த பெண்மை அறியாதா ஆ ஆ ஆ ஆ.     

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் 
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன் 

உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி...

Movie: Lesa Lesa
Lyrics: Vaali
Music: Harris Jayaraj

Post a Comment

0 Comments