Vidaikodu Vidaikodu Song Lyrics in Tamil
ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ
ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ
விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது
உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய்
பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்
ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன்
போவதாய் வருகிறாய் நூறு முறை தானே
இன்றே விடை கொடு என்றுனை கேட்கின்ற வார்த்தையை
மௌனத்தில் இடருகின்றாய்
உள்ளே நடை பெரும் நாடகம் திரை விழும் வேளையில்
மேடையில் தோன்றுகிறாய்
தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே
விடைகளே கேள்வியாய் ஆகிறதே
ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ
விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது
ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஹா...
நிலவு பேச்சை கேட்டேன் மொழியாய் பிரிந்து கோத்தேன்
வாழ்த்தினேன் மறைகிறேன் ஞாபகத்தை கோர்த்தேன்
உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை
ஒரு முறை வெளியில் எடு
உந்தன் சாலைகள் நெடுங்கில் பூவிடும்
மரங்களை வளர்த்திட உரிமை கொடு
நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய்
எதிர் திசை தூரமே அழைக்கிறதே
ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ
விடை கொடு விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு
உயிரே உடல் மட்டும் போகிறது
உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய்
பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்
ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ
ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ...
Movie: Piriyadha Varam Vendum
Lyrics: Pazhani Bharathi
Music: S. A. Rajkumar
0 Comments