Unna Ippo Paakkanum Song Lyrics in Tamil
உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும்
உறவே மனம் தேம்புதே உசுர தர ஏங்குதே
நீ எங்கேயும் போகாத நான் வாரேன் வாடாத
உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும்
இங்கே கடல் அங்கே நதி இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல் விழுந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம் கண்ணீரிலே ஓவியம்
வரையும் விதி என்னென்னசெய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ…
உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும்
இங்கே உடல் அங்கே உயிர் இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி பாயும் ஒளி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு
உன்ன இப்போ பாக்கணும் ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும் அன்ப காட்டணும்
உறவே மனம் தேம்புதே உசு.. தர ஏங்குதே
நீ எங்கேயும் காணாம எங்கேதான் போனாயோ
உன்ன இப்போ பாக்கணும்...
Movie: Kayal
Lyrics: Yuga Bharathi
Music: D. Imman
0 Comments