Lyricist Yugabharathi

சிங்கக்குட்டி பாடல் வரிகள்

சிங்கக்குட்டி நான் தான்டி ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி 
சொல்ல சொல்ல கேக்காம வந்து அம்மி கொத்தி போறேன்டி

அடங்கி நீ நடக்கணும் ஆட்டம் போடாம 
என்ன கலந்துதான் செவக்கனும் கூச்சம் காட்டாம
முறைமாமன் தொட வேணும் வா வாட்டாம…

சிங்கக்குட்டி நீ தானே ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே 
சொல்ல சொல்ல கேக்காம வந்து குப்ப கொட்ட போறேனே

அடங்கி நீ நடக்கணும் ஆட்டம் போடாம 
ஒன்ன கலந்து நா செவக்கனும் கூச்சம் காட்டாம
இலை போட்டும் பசி ஆனேன் நீ ஊட்டாம..

கண்ண வெச்சு நீதான் என்ன கத்திரிச்சு போற
மந்திரிச்ச ஆட உயிர் சுத்துது ஒன்ன சேர

அச்சுவெல்ல பேச்சில் நீதான் சுண்ட காச்சுற..
எச்சி வெக்க ஏங்கித்தானே வண்டி ஓட்டுற..

நீ வர மறுத்து பாத்தா உச்சி மூளைய மோதுது போதை 
விலகாத… சிங்கக்குட்டி சிங்கக்குட்டி

சிங்கக்குட்டி நான் தான்டி ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேனே
சொல்ல சொல்ல கேக்காம..

அள்ள அள்ள கூடும் நல்ல அன்புக்கில்ல தோல்வி
ஒட்டுமொத்தமாக தர ஒன்னுமில்லை கேள்வி

சொத்து பத்து ஏதும்வேணா சொக்கிப்போகவே
பத்து ஜென்மம் போதாதம்மா சொந்தம் நீளவே

கோடியிலே ஒரு ஆளு மஞ்ச தாலிய நீ இடும் நாளு திருநாளு
சிங்கக்குட்டி நான் தான்டி ஒன்ன செல்லம் கொஞ்ச வாறேன்டி 
சொல்ல சொல்ல கேக்காம வந்து அம்மி கொத்தி போறேன்டி
சிங்கக்குட்டி சிங்கக்குட்டி ஆ.ஆ. ஆ.ஆ. 
சிங்கக்குட்டி சிங்கக்குட்டி ஆ.. ஆ.. ஆ.. ஆ…

Movie: Podhuvaga Emmanasu Thangam
Lyrics: Yugabharathi
Music: D. Imman

Leave a Reply