Oru Arai Unathu Song Lyrics in Tamil - ஒரு அறை உனது

Oru Arai Unathu Song Lyrics in Tamil

Lyricist Thamarai

ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா
ஒரு முனை உனது ஒரு முனை எனது இருவரின் துருவம் இணைந்திடுமா

ஒரு முகில் உனது ஒரு முகில் எனது இடையினில் நிலவு கடந்திடுமா
ஒரு கதை உனது ஒரு கதை எனது விடுகதை முடியுமா

ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா

வண்ணம் நூறு வாசல் நூறு கண் முன்னே காண்கின்றேன்
வானம்பாடி போலே மாறி எங்கேயும் போகின்றேன்

வானத்துக்கும் மேகத்துக்கும் ஊடே உள்ள வீடொன்றில்
யாரும் வந்து ஆடி போகும் ஊஞ்சல் வைத்த என் முன்றில்
போகும் போக்கில் போர்வை போர்த்தும் பூந்தென்றல்

ஒரு பகல் உனது ஒரு பகல் எனது இடையினில் இரவு உறங்கிடுமா
ஒரு இமை உனது ஒரு இமை எனது இடையினில் கனவு நிகழ்ந்திடுமா

ஒரு மலர் உனது ஒரு மலர் எனது இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா
ஒரு முகம் உனது ஒரு முகம் எனது இருவரும் நிலவின் இருபுறமா

ஒரு பதில் உனது ஒரு பதில் எனது புதிர்களும் உடையுமா
ஒரு அறை உனது ஒரு அறை எனது இடையினில் கதவு திறந்திடுமா

ஒரு அலை உனது ஒரு அலை எனது இடையினில் கடலும் கரைந்திடுமா
ஒரு முனை உனது ஒரு முனை எனது இருவரின் துருவம் இணைந்திடுமா

ஒரு முகில் உனது ஒரு முகில் எனது இடையினில் நிலவு கடந்திடுமா
ஒரு கதை உனது ஒரு கதை எனது விடுகதை முடியுமா...

Movie: Maara
Lyrics: Thamarai
Music: Ghibran

Post a Comment

0 Comments