Lyricist Snehan

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு பாடல் வரிகள்

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

சாம்பிராணி வாசத்தில வளா்ந்த சிரிக்கி நீ சகுனம் பார்த்து
சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ

சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவையில்லையே
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே

அடியே கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ருசியா பேசுற ருசியா பாக்குற ருசியா சமையல செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா

பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா

மிளகுல ரசமா மொளகா தூக்க நல்லா செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
நண்டு வறுக்க தெரியுமா கோழி பொரிக்க தெரியுமா 
ஆட்டு கால நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா

என் இடுப்பு ஓரமா இருக்குதையா காரமா
கண்டு நீயும் புடிச்சுட்டா எடுத்துக்கையா தாராளமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ஊரு ஓரமா ஐயனார் போல நீ மீசைய காட்டி மிரட்டுறியே
ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ வேலிய தாண்ட அஞ்சுறியே

தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா
தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான்

பங்குனி வரட்டும் பரிசம் தாரேன் அதுக்கு
முன்னால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு டி

மஞ்ச பூசி குளிச்சிட்டா மனசுக்குள்ள வோ்க்குது உன்ன
நானும் பார்த்துட்டா உடம்பு முழுக்க கூசுது

வெந்தயத்தை அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா 
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா…
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

சாம்பிராணி வாசத்தில வளா்ந்த சிரிக்கி நீ சகுனம் பார்த்து
சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ

சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவையில்லையே
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே

தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா…

Movie: Saamy
Lyrics: Snehan
Music: Harris Jayaraj

Leave a Reply