Kadhala Kadhala Song Lyrics in Tamil
காதலா காதலா காதலின் சாரலா காதலா காதலா காதலின் சாரலா
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா மாறினேன் மீன்களா
காதலா காதலா காதலின் சாரலா ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ
இதயத் துடிப்பினில் ஓசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதற்குமுன் இந்த ஆசையில்லை இமைகள் விசிறிகள் வீசவில்லை
தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன்
அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன்
தலையணையோடு நான் அடம்பிடித்தேன் ஏனிந்த மாற்றமோ
காதலா காதலா காதலின் சாரலா
பெருகிப் பெருகி ஒரு அலையானேன்
உருகி உருகி பனித் துளியானேன் பறந்து பறந்து ஒரு சிறகானேன்
நனைந்து நனைந்து புல்வெளியானேன்
பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன
மலர்களில் எல்லாம் கண் முளைப்பதென்ன
ரகசியம் சொல்லி என்னை ரசிப்பதென்ன
ஏனிந்த மாற்றமோ காதலா காதலா
காதலின் சாரலா தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா மாறினேன் மீன்களா
காதலா காதலா காதலின் சாரலா ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்...
Movie: Suryavamsam
Lyrics: Pazhani Bharathi
Music: S. A. Rajkumar
0 Comments