Idarkuthaane Aasaipattai Song Lyrics in Tamil
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே உன் வாழ்க்கை போகுதோ எங்கே உன் தூக்கம் போனதோ
நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய் ராஜகுமாரி ரத்தின குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே நீ கேட்ட ராஜ்ஜியம் ஐய்யோ நீ இங்கே பூஜ்ஜியம்
ஓா் தங்க கூண்டில் நீ மாட்டிக் கொண்டாய் ராஜகுமாரி ரத்தின குமாரி
உன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி நீ நடக்கும் தோரணைகள் மாறி..
உற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சு மாறி நீ சூடும் மூரல் வேராக மாறி.
மாறி மாறி யாவும் மாறி ராஜா குமாரி ஏய் ரத்தின குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி.
பழைய நிலைக்கு திரும்பவே சிறிய இதயம் விரும்புதே
வழிகள் அதற்கு எங்கே குழப்பம் எதற்கு இங்கே
ஒடிந்து முடிந்த உறவுகள் விடிந்த மனதில் அரும்புதே
பொருளும் இதற்கு எங்கே குழப்பம் எதற்கு இங்கே
காசுக்குத் தானே நீ ஆசைப்பட்டு போனாய்
பாசத்துக்கு ஏங்கும் ஓா் பூனையாக ஆனாய்
புழுதி சிரிப்போ இங்கே பளிங்கு சிறையோ அங்கே
ராஜகுமாரி ரத்தினகுமாரி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி...
Movie: Romeo Juliet
Lyrics: Madhan Karky
Music: D. Imman
0 Comments