Lyricist Vairamuthu

உன்னை நான் உன்னை நான் பாடல் வரிகள்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான் 
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே 
லட்சம் சிறகுகள் முளைக்குதே

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் உயிரியா
ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்கு ஜே ஜே

உன்னை நான் உன்னை நான் உன்னை நான் 
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே 
லட்சம் சிறகுகள் முளைக்குதே

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் உயிரியா
ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்கு ஜே ஜே

உன்னை நான் உன்னை நான் உன்னை நான் 
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

சொக்குபொடி கொண்ட சுடர் விழியா
திக்கி திக்கி வந்த சிறு மொழியா 
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி

எட்டு மில்லிமீட்டர் புன்னகையா 
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா 
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி

முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா மூடி கிடந்த ஜோடி திமிரா
என்ன சொல்ல எப்படி சொல்ல எதுகை மோனை கை வசம் இல்ல
உன்னை எண்ணி கொண்டு உள்ளே பற்றி கொண்டு 
உள்ளம் நோகுதடி என் உச்சி வேகுதடி

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா
ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்க ஜே ஜே
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

மறுமுறை உன்னை சந்திப்பேனா 
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா 
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா

வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே 
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே

பதறும் இதயம் தோண்டி எடுத்து 
சிதறு தேங்காய் போட்டு முடித்து 
உடைந்த சத்தம் உந்திடும் முன்னே 
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்

என்னை காணும் போது கண்ணை பார்த்து
சொல்லு கண்ணே என் போல நீயும் காதல் கொண்டாயா

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா 
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா
ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்கு ஜே ஜே

உன்னை நான் உன்னை நான் உன்னை நான் 
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே 
லட்சம் சிறகுகள் முளைக்குதே

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா
ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்கு ஜே ஜே…

Movie: Jay Jay
Lyrics: Vairamuthu
Music: Bharadwaj

Leave a Reply