Unakenna Unakenna Song Lyrics in Tamil - உனக்கென உனக்கென

Unakenna Unakenna Song Lyrics in Tamil

Lyricist Pa. Vijay

உனக்கென உனக்கென பிறந்தேனே 
உயிரென உணர்வேனே கலந்தேனே

உனக்கென உனக்கென பிறந்தேனே 
உயிரென உணர்வேனே கலந்தேனே

இதயத்தை இதயத்தை இழந்தேனே 
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

உனக்கென உனக்கென பிறந்தேனே 
உயிரென உணர்வேனே கலந்தேனே

திருவிழா போல  காதல்தான் 
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில் 
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீ ராம ஜெயத்தை போல் உனது பெயரை  
தினம் எழுதி பார்க்கிறேன்

கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி 
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை 
உயிர் வரை கேட்கிறதே

உனக்கென உனக்கென பிறந்தேனே 
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே 
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

கடலாக நீயும் மாறினால் 
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்

நெருப்பாக நீயும் மாறினால் 
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்..
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை பரிசாக கேட்கிறேன்..

அகல் தீபமாகி ஆகாய நிலவை உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோதும் 
உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்

உனக்கென உனக்கென பிறந்தேனே 
உயிரென உணர்வேனே கலந்தேனே

இதயத்தை இதயத்தை இழந்தேனே 
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

உனக்கென உனக்கென பிறந்தேனே 
உயிரென உணர்வேனே கலந்தேனே

இதயத்தை இதயத்தை இழந்தேனே 
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
உனக்கென உனக்கென பிறந்தேனே...

Movie: Vinnukum Mannukum
Lyrics: Pa. Vijay
Music:  Sirpy

Post a Comment

0 Comments