Lyricist Madhan Karky

சிலு சிலு பாடல் வரிகள்

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத 
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட 
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா

மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு 
மனம் விட்டுச்சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம் 
அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா

அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம் இலை ஓடுதே

வெயில் வரம் துாறுதே காடே நிறம் மாறுதே 
மேடை இன்றி உண்மை அரங்கேறுதே

சொர்க்கம் இதுதானம்மா மேலே கிடையாதும்மா 
சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத 
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட 
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா

முட்கள் கிழித்தாலுமே மொத்தம் அது ஆகுமே 
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே 
தெய்வம்கூட இங்கே பசியாறுமே

இது நாம்தானடி மாறிப்போனோமடி 
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத 
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட 
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா

மேல் கீழாக அருவி எல்லாம் இங்கு 
மனம் விட்டுச்சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம் 
அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

Movie: Vanamagan
Lyrics: Madhan Karky
Music: Harris Jayaraj

Leave a Reply