Poraale Ponnuthayi Song Lyrics in Tamil
ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ
ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ...
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு
சாமந்திப் பூவா ஊமத்தம் பூவா கருத்தம்மா எந்தப் பூவம்மா..
அஞ்சாறு சீவன் உள்ளூரில் ஏங்க பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு...
நீ வச்ச பாசம் நீ சொன்ன நேசம்.. கடைசியில் ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி.. தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னான மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒன்னு வாடுதடி வாடுதடி...
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி...
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு...
ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ
ஓஓஓஓ …..ஓஓஓ ….ஓஓஓஓ...
நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு...
ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா...
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா...
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு
சாமந்திப் பூவா ஊமத்தம் பூவா கருத்தம்மா எந்தப் பூவம்மா..
அஞ்சாறு சீவன் உள்ளூரில் ஏங்க பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு...
Movie: Karuthamma
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman
0 Comments