Oru Roja Thottam Song Lyrics in Tamil – ஒரு ரோஜா தோட்டம்

Oru Roja Thottam Song Lyrics in Tamil

Lyricist Snehan

ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா

ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா

ஒரு வானவில்லை பூமியில் கண்டேன் நீ வந்ததாலா
நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன் உன்னை கண்டதாலா
அட சாமத்தில் சூரியன் ஜன்னலை தட்டுதே கை கோர்த்ததாலா

ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா

மனு போட்ட கண் சுகமா உன் மனசுக்குள் நான் சுகமா
என் மார்போடு தலை சாய்க்கும் மாமாவே சுகமா சுகமா
சுகமா சுகமா சுகமா சுகமா

தேனூறும் இதழ் சுகமா நான் தீண்டாதா இடம் சுகமா
நீ எனக்காக நெய்கின்ற வெட்கங்கள் சுகமா சுகமா

நான் கடிச்ச நடு விரலில் நக கண்ணும் சுகம் தானே
இடைவெளிகள் குறைந்து விட்டால் இம்சைகளும் சுகம் தானே

இனி உன்னோடு நான் இருக்கும் நொடிஎல்லாம் பூ நடக்கும் 
நீ இல்லாமல் நான் நடக்க வழியெல்லாம் முள் இருக்கும்
அட வெண்ணிலா வேர்குதே புன்னகை பூக்குதே நம்மை கண்டதாலா

ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா

அலை பாயும் குழல் சுகமா உன் அழகானா செவி சுகமா
உன் கழுத்தோரம் கவி பாடும் சிறு மச்சம் சுகமா சுகமா
சுகமா சுகமா சுகமா சுகமா

மலை தூக்கும் பலம் சுகமா என் மடி சாயும் தலை சுகமா
நான் தடுத்தாலும் கேக்காத பிடிவாதம் சுகமா சுகமா

என்னோட ஆயுள்எல்லாம் கூடுதடி உன்னால
உன்னோடு வாழ்வதிலே மரணம் இல்லை பின்னாலே

நான் பூவாலே உடை தைத்து பூங்காற்றில் அனுப்பிருந்தேன்
நீ பூச்சூடும் கூந்தலிலே உனை சூடி காத்திருந்தேன்

அட என்னை நீ உன்னை நான் என்னமோ செய்றோம்
காதல் வென்றதாலா

ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா

ஒரு வானவில்லை பூமியில் கண்டேன் நீ வந்ததாலா
நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன் உன்னை கண்டதாலா
அட சாமத்தில் சூரியன் ஜன்னலை தட்டுதே கை கோர்த்ததாலா...

Movie: Manu Needhi
Lyrics: Snehan
Music: Deva

Post a Comment

0 Comments