Mottugale Mottugale Song Lyrics in Tamil
மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே
கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
நீ ஒரு பூ கொடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும் பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்
உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்
ரோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன்
நீ ஆகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டையில் பூவாய் பூப்பேன்
மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே
கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தம் என்பேன்
கடற் கரை மணலில் நமது பேர்கள் எழுதி பார்ப்பேன்
அலை வந்து அள்ளிச் செல்ல கடலை கொல்ல பார்ப்பேன்
உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன் பார்ப்பேன்.
மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது...
Movie: Roja Kootam
Lyrics: Pazhani Bharathi
Music: Bharadwaj
0 Comments