Mayilaadum Paarai Song Lyrics in Tamil
மயிலாடும் பாறை பக்கத்தில ஓடை
மயிலாடும் பாறை பக்கத்தில ஓட
அழகு ஓவியமா பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா
மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா ஓஓ
துள்ளி ஓடும் முயலுக்கு தான் காது குத்த வைப்போமா
நாம் கம்மல் போட்டு பாப்போமா தத்தி நடக்கும் குட்ட வாத்தே
நடந்திட பலகம்மா நான் நட வண்டி தாரேன் மா
ஒத்த காலிலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஒத்த காலிலே
நிற்கும் நாரையே கேட்கும் வரத்தையே நாமும் தருவோமா
ஆட்டு தாடி சிக்கெடுத்து ரெட்டை ஜடை பின்னுவோமா
வாய் இல்லாத ஜீவன் எல்லாம்
கொஞ்ச தோணும் குழந்தை ஆவோமம்மா
மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா கியா கியா.. ஓஓ
மூக்கு சிவந்த பச்சை கிளியே உனக்கென்ன கோவமா
கோவ பழம் தாரேன் மா வாடி கெடக்கும் பச்ச கொடியே
உனக்கென்ன தாகம்மா நான் தண்ணீர தாரேன் மா
கோயில் மாட புறா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ கோயில் மாட புறா
கூடி ஆடுமே மேக கூட்டமே மேடை போடுமே
வண்ண வண்ண பட்டம் விட்டு வெண்ணிலவை தொடுவோமா
சின்ன சின்ன சொப்பு வெச்சு வக்கனையா சமையல் செய்வோமா
மயிலாடும் பாறை பக்கத்தில ஓட அழகு ஓவியமா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுல குட்டி குட்டி கவிதை வேலையுமா
கியா கியா கியா கியா..ஓஓ...
Movie: Manu Needhi
Lyrics: Kalaikumar
Music: Deva
0 Comments