Kadavule Kadavule Song Lyrics in Tamil
கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே
அர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்றுக் காண்பதெல்லாம்
பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனைத் தருவதற்கே உயிரைத் தந்தாயம்மா
கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே
கண்ணை பார்த்ததும் வேகமாய் மின்னல் அடித்தது நெஞ்சிலே
தோளில் சிறகுகள் இன்றியே தேகம் பறக்குது விண்ணிலே
இந்த புது உயிரே நீ தந்ததாய்
என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுத
ஓர் எருதாய் எருதாய் அலைந்து வந்தேன்
உன் இமையின் அழைப்பால் கரையில் வந்தேன்
உன் விரலில் என் மனசும் மோதிரமாகியதே
கடவுளே.. கடவுளே.. மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே
ஓ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
மண்ணை முதல் முறை பார்த்திட தாயின் கருவறை சொன்னது
என்னை முதல் முறை பார்த்திட உந்தன் கரு விழி சொன்னது
மலை உயரத்திலே நதி தோன்றுமே அது சேரும் இடம் கடல் ஆகுமே
இது உயிரும் உயிரும் பேசும் மொழி
இதை விடவும் சிறந்தது எந்த மொழி
என் உயிரை உன் பாதத்தில் காணிக்கை ஆக்குகிறேன்
கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே
அர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்று காண்பதெல்லாம்.. பொய் இல்லை மெய் தானம்மா..
தட்சணை தருவதற்கே உயிரைத் தந்தாயம்மா..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
Movie: Kacheri Arambam
Lyrics: Na. Muthukumar
Music: D. Imman
0 Comments