Ennai Thalattum Song Lyrics in Tamil - என்னை தாலாட்டும்

Ennai Thalattum Song Lyrics in Tamil

Lyricist Pa. Vijay

Lyricist Pa. Vijay
என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா உன்னை நான் என்பதா

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்கையிலே வனமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய் நெஞ்சில் நீ வாழ்கிறாய்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன்
தினம் திரியாகிறேன்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா உன்னை நான் என்பதா

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா...

Movie: Unnai Ninaithu
Lyrics: Pa. Vijay
Music:  Sirpy

Post a Comment

0 Comments