Lyricist Pa.Vijay

உன்னாலே உன்னாலே பாடல் வரிகள்

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
ஒஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே
உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே

ஒரு சொட்டு கடலும் நீ ஒரு போட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் ஹோ ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
ஒஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே

ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் விழ்தேனே தூங்காமல் வாழ்வேனே

நதிமீது சருகைப்போல் உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ கதி மோட்சம் தருவாயோ

மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே

முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
ஒஹோ தனித்தனியாக தன்னந்தனியாக 
இலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே
உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே

நீ என்பது மழையாக நான் என்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்

சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்

என் வாசம் என் வாசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
ப ப ப ப பாப்பா பபப் பா

உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே
உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே

ஒரு சொட்டு கடலும் நீ ஒரு போட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்

ஒளி வீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்…

 

Movie: Unnale Unnale
Lyrics: Pa. Vijay
Music: Harris Jayaraj

 

Leave a Reply