Pogadhey Pogadhey Song Lyrics in Tamil
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே ஹே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ… ஹோ உயிரோடு பார்த்திருப்பேன் ஓ… ஹோ
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே ஆனாய் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணை நீ இல்லாமல்.. பூலோகம் இருட்டிடுதே..
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்...
Movie: Deepavali
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja
0 Comments